வாஷிங்டன்:"சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட "விக்கி லீக்ஸ்' ஆவணங்களால், அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும், துணைச் செயலர், முதல் செயலர் வரையிலான அனைவரின் பணியும் இப்போது கடினமாகி விட்டது. அவர்கள் இன்னும் சிறிது காலத்திற்கு தகவல் சொல்ல தயங்குவர்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் "விக்கி லீக்ஸ்' இணையதளம், அமெரிக்க வெளியுறவு கொள்கை தொடர்பான 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி கூறியதாவது:இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் இருந்து அன்றாட நடவடிக்கைகள் குறித்த செய்திகளை பெறுவது மிகவும் கடினமாக தான் இருக்கும். முன்பு, மிக சுதந்திரமாக பேசிய அதிகாரிகள் இனி, விஷயங்களை சொல்ல தயங்குவர். இதற்கிடையே தான் எங்களது பணியும் தொடர வேண்டியிருக்கிறது.இதுகுறித்து நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்படாத பிறநாட்டு தலைவர்களும், இதுகுறித்து கவலையுடன் இருக்கின்றனர். எனினும் தூதரக வேலைகளை நாங்கள் தொடர்வோம். தொடர்ந்து பேசி வருவோம்.இவ்வாறு க்ரவுலி தெரிவித்தார்.
No comments:
Post a Comment