
கடந்த 2009, பிப்., 4 ல், ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹோல் ப்ரூக்கிற்கு, பாகிஸ்தானுக்கான அப்போதைய அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன் எழுதியிருந்ததாவது: காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தைக்கான பாதையை அடைத்தது மும்பைத் தாக்குதல் தான். ஆனால், காஷ்மீர் பிரச்னையை எதிர்கொள்வதில் தான் தனது பிராந்திய பாதுகாப்பு அடங்கியிருக்கிறது என்று பாக்., நம்புகிறது.
மும்பைத் தாக்குதலுக்கு பிறகாவது, பயங்கரவாதிகள் மற்றும் பழங்குடியினரை தனது வெளியுறவு கொள்கைக்கான ஆயுதமாக பயன்படுத்தும் போக்கை பாக்., ராணுவம் அல்லது ஐ.எஸ்.ஐ., மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்திய ராணுவத்தின் பதிலடியில் இருந்து தப்ப வேண்டுமானால், மும்பை விவகாரத்தில் போதுமான விசாரணையை பாக்., மேற்கொள்ள வேண்டும். காஷ்மீருக்கான சிறப்பு தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அமெரிக்காவை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்றில் பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டு ஆதரித்த போது, பாக்., வெளியுறவு அமைச்சகம் தான் அதை புறக்கணித்து விட்டது. எது எப்படியிருந்தாலும், தனிப்பட்ட முறையில், பாக்., அதிபர் சர்தாரியும், வெளியுறவு அமைச்சர் குரேஷியும், காஷ்மீர் பிரச்னையில் உங்கள் தலையீட்டை வரவேற்கின்றனர். இவ்வாறு அவர் எழுதியுள்ளதாக, "விக்கிலீக்ஸ்' ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment