
"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்களில், ஐ.நா.,வில் உள்ள உயரதிகாரிகள், நிரந்தர உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், குறிப்பாக, சீனா, இந்தியா, கியூபா, எகிப்து, இந்தோனேஷியா, மலேசியா, பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, சூடான், உகாண்டா, செனகல் மற்றும் சிரியா நாட்டுப் பிரதிநிதிகளின், விரல்ரேகைகள், விழித்திரை பதிவுகள், இ-மெயில்கள், அவற்றின் "பாஸ்வேர்டு'கள், அவரவர் நாடுகளின் தலைநகரங்களுடன் அவர்கள் கொண்டுள்ள தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்கும்படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, 2009, ஆகஸ்டில் வெளியாகியுள்ளது. அதே ஆண்டு, மே மாதம் தான், ஐ.நா.,வுக்கான இந்திய தூதராக ஹர்தீப் சிங் பூரி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ், "பிறநாட்டு பிரதிநிதிகள் உலகம் முழுவதும் என்ன செய்கின்றனரோ, அதை தான் நாங்களும் செய்தோம். இந்த நடவடிக்கைகள், பல்வேறு தரப்பு உறவுகள் தொடரவும், பேச்சுவார்த்தை நடக்கவும், சிக்கலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காணவும் உதவும். இவை அமெரிக்க பாதுகாப்புக்கு அவசியமும் கூட' என்றார்.
"நோ கமென்ட்': ஐ.நா.,: இவ்விவகாரம் குறித்து ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூனின் செய்தித்தொடர்பாளர் பர்ஹன் ஹக் கூறுகையில், "ஐ.நா., இயல்பிலேயே வெளிப்படையான ஓர் அமைப்பு. அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கும், அதன் உறுப்பு நாடுகளுக்கும் தெரியும். "விக்கிலீக்சின்' வெளியீடுகள் உண்மையா என்பது குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது' என்றார்.
No comments:
Post a Comment