
புதுடில்லி: இந்தியாவின் முக்கிய அங்கமான சி.பி.ஐ., அமைப்பின் இணையதளத்தை பாகிஸ்தான் நாசப்படுத்தியுள்ளது. இன்றைய கம்ப்யூட்டர் உலகில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக இருப்பது அந்த அமைப்பின் இணையதளம்தான்.
இந்தியாவின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு துறை ( சி.பி.ஐ.,)யின் இணையதளத்தில் அது எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிடப் பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஒரு உயிர்நாடியான இணையதளத்தில் பாகிஸ்தான் கை வைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.சி.பி.ஐ., இணையதளத்தை திறந்தால் பாகிஸ்தான் சைபர் ராணுவ மெசேஜ் வருகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெயரில் வரும் இந்த விவகாரம் காரணமாக சி.பி.ஐ., இணையதளம் தற்போது செயல் இழக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ஒரு வழியில தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவு பிரிவினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்த முயற்சி நமது பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டது. மும்பை தாக்குதல் நாளான 26 / 11 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவு படை தகவல்கள் மூலம் இந்தியா முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியது. எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் முடிந்தது.
பாகிஸ்தான் சிந்தாபாத் கோஷம் : இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு ஊழல் விவகாரங்களை விசாரித்து வரும் சி.பி.ஐ., இணையதளம் நாசப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை திறந்தால் பாகிஸ்தான் சைபர் ராணுவ பிரிவு சார்பில் ஒரு மெசேஜ் வருகிறது. இதில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் இணையதளங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும், பாகிஸ்தான் சிந்தாபாத் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சி.பி.ஐ., சார்பில் வைக்கப்பட்டிருந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் அமைப்பினருடன் இணைந்து செயல்படும் பாதுகாப்புமிக்கது சி.பி.ஐ., இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல 270 இணையதளங்களை பாகிஸ்தான் முடக்கியிருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment