"அமுர்' நீர்மூழ்கி கப்பல் : இந்தியா வாங்க ஆர்வம்
மாஸ்கோ : ரஷ்யாவின் ஆறு, "அமுர்' ரக நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க, இந்தியா முடிவு செய்துள்ளது. கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, ரஷ்யாவிடமிருந்து மேம்படுத்தப்பட்ட நவீன, "அமுர்' ரக நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 2015ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில், அதிநவீன, 25 நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்சிடமிருந்து வாங்க உள்ள, "ஸ்கார்பின்' ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், 2012ல் மும்பையில் வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. ரஷ்யாவின் ஆயுத விற்பனை நிறுவனமான ரொசொபொரோன், இந்தியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை சப்ளை செய்ய ஆர்வம் காட்டுகிறது. "அமுர்' ரக நீர்மூழ்கிக் கப்பல், 300 மீட்டர் ஆழத்துக்குள், 45 நாட்கள் வரை செல்லும் வல்லமை வாய்ந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில், 35 பேர் வரை தங்க முடியும். கப்பலை வாங்குவதற்காக விரைவில் ஏலம் கோரப்பட உள்ளது.
No comments:
Post a Comment