இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் முஸ்லிம் இடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, கிறிஸ்துவ இடுகாட்டில் புதைக்கப்பட்டது.பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் வசிப்பவர் பிரேம்கிஷன். இவரது 10 வயது மகள் சுமன் கடந்த மாதம் இறந்து விட்டாள். ராவல்பிண்டியில் உள்ள ரட்டா அம்ரால் சுடுகாட்டில் சுமனின் உடல் புதைக்கப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் ஒன்று திரண்டு, இந்து சடலத்தை முஸ்லிம் இடுகாட்டில் புதைப்பது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது, என கூறி பிரச்னையை பெரிதாக்கின.
இடுகாட்டு நிர்வாகத்தினர் தவறுதலாக சிறுமியை புதைத்து விட்டதாக கூறினர்.இந்த பிரச்னை மதகலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டதால், இடுகாட்டு நிர்வாகம், பிரேம் கிஷனை அழைத்து சிறுமியின் சடலத்தை வேறு இடுகாட்டில் அடக்கம் செய்யும் படி கேட்டுக்கொண்டது. சிறுபான்மையினத்தை சேர்ந்த சடலம் என்பதால் வேறு வழியின்றி ஒரு மாதம் கழித்து சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு அருகே உள்ள கிறிஸ்தவ இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment