WELCOME TO JUST-ONECLICK.BLOGSPOT.COM ......... A few stories around Education on the UNICEF India

Thursday, December 2, 2010

முஷாரப் நாடு திரும்ப ஐக்கிய எமிரேட் ஆவல்முஷாரப் நாடு திரும்ப ஐக்கிய எமிரேட் ஆவல்

 
 இஸ்லாமாபாத் : முன்னாள் அதிபர் முஷாரப், நாடு திரும்பி அரசியலில் ஈடுபட சாதகமான ஏற்பாடுகளை செய்யும் படி, ஐக்கிய அரபு எமிரேட் அரசு, பாகிஸ்தான் அரசை வற்புறுத்தி வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தற்போது பிரிட்டனில் தங்கியுள்ளார். "கடந்த 2007ல் அவர், தலைமை நீதிபதி உள்ளிட்ட 60 நீதிபதிகளை வீட்டு சிறையில் அடைத்தது, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்' என, சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதேபோல அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனவே, அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் அவர் நாடு திரும்பி தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் "அனைத்து முஸ்லிம் லீக் கட்சி' என்ற பெயரில் கட்சியை துவக்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனசிர் படுகொலை தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுத் துறை 32 கேள்விகளை முஷாரப்புக்கு அனுப்பியது. இந்த கேள்விக்கு பதில் அளிக்க முஷாரப் மறுத்து விட்டார். முஷாரப் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை தவிர்க்கும்படி ஐக்கிய அரபு எமிரேட் அரசு, பாகிஸ்தான் அரசை நிர்பந்தித்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி துபாய், அபுதாபி சென்ற போது அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம், முஷாரப் தாயகம் திரும்ப சாதகமாக நடவடிக்கைகளை செய்து தரும்படி அறிவுறுத்தியது.
பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோரும் முஷாரப்புக்கு எதிரான போக்கை தவிர்க்கும்படி, ஐக்கிய அரபு அரசு அறிவுறுத்தியுள்ளது. முஷாரப் காலத்தில் நவாஸ் ஷெரீப், பெனசிர் புட்டோ ஆகியோருக்கு ஆதரவாக ஐக்கிய அரபு எமிரேட் அரசு இருந்தது. தற்போது முஷாரப்புக்கு ஐக்கிய அரபு அரசு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...