WELCOME TO JUST-ONECLICK.BLOGSPOT.COM ......... A few stories around Education on the UNICEF India

Thursday, December 2, 2010

தகவல் கசிவில் அமெரிக்க தொடர்பு : சீனா பகிரங்க புகார்

 
பீஜிங் : "விக்கி லீக்ஸ் ஆவணங்கள் வெளியிடுவதை அமெரிக்காவின் புலனாய்வு ஏஜன்சியான சி.ஐ.ஏ.,வால் தடுக்க முடியவில்லை. இதனால், அமெரிக்காவுக்கும், விக்கி லீக்சுக்கும் இடையில் மறைமுகத் தொடர்பு இருந்திருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது' என்று, சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.
சீனாவில் இருந்து வெளியாகும் ஒரே ஆங்கிலப் பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' தனது தலையங்கத்தில் இது குறித்து எழுதியிருப்பதாவது: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த "விக்கி லீக்ஸ்', அமெரிக்க வெளியுறவு தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க முற்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதை பார்த்தால், அந்த ஆவணங்கள் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கத்தான் செய்கிறது. ரகசிய தகவல்களை எவ்வித செலவுமின்றி பெறுவதற்கு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்திருப்பதாக "விக்கி லீக்ஸ்' தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் புலனாய்வு ஏஜன்சியான சி.ஐ.ஏ.,வால் இந்த வெளியீட்டை தடுக்க முடியவில்லை. ஜூலியன் அசேஞ்ச் பிரபலமானவராக இருந்தும் இன்னும் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. "விக்கி லீக்சு'க்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் மறைமுகத் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...