WELCOME TO JUST-ONECLICK.BLOGSPOT.COM ......... A few stories around Education on the UNICEF India

Saturday, December 4, 2010

காசு மேல காசு: வெளுத்து வாங்கும் ரோந்து போலீசு: அதிகாரிகள் வேடிக்கை

கோவை : கோவை புறநகரில் இயக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாருக்கு "பணத்தேவை' அதிகரித்துள்ளது போலும். விபத்து மற்றும் குற்றங்களை தடுப்பதில் முனைப்பு காட்டாமல், வாகன சோதனை நடத்தி டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி, கொள்ளை குற்றங்களை தடுக்கவும்; வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவோருக்கு அவசர கால உதவிகளை மேற்கொள்ளவும், "தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம்' கோவையில் இயக்கப்படுகிறது. இவ்வாகனங்கள், கோவை - சத்தியமங்கலம் சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மற்றும் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் "ஷிப்ட்' முறையில் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு ரோந்து வாகனத்திலும் தலா ஒரு எஸ்.ஐ., தலைமையில் நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் திருட்டு, வழிப்பறி குற்றங்கள் அல்லது வாகன விபத்து நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இப்போலீசாரின் பணி. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகளின் எல்லைக்குள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டிய போலீசார், முறைகேடாக பண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன சோதனை என்ற பெயரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் போலீசார், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்கள் வைத்திருக்காத நபர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக ஆடு, மாடு, கோழி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை மடக்கி 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை கறந்துவிடுகின்றனர் நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் இவ்வகையான வசூல் அதிகரித்துள்ளது.சரக்கு லாரியில் ஆடு, மாடு >உள்ளிட்ட கால்நடைகள் தினமும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச்செல்வதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை டிரைவர்கள் பின்பற்றுவதில்லை. அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை லாரிகளில் அடைத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் கொண்டு செல்கின்றனர். இவ்வாகனங்களை மடக்கி பிடிக்கும் ரோந்து போலீசார், டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.மாமூல் தர மறுக்கும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என வெளிப்படையாகவே மிரட்டவும் செய்கின்றனர்.

இதனால், பலரும் போலீசார் கேட்கும் பணத்தை கொடுத்துச் செல்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் தமிழகம் - கேரளா எல்லை அருகிலுள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதிகளில் அதிகம் நிகழ்கின்றன. மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், பேரூர் பகுதிகளிலும் வாகன சோதனை என்ற பெயரில் போலீசாரின் அடாவடி வசூல் நடக்கிறது.

தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி கூறுகையில், "வாகன சோதனை என்ற பெயரில் பண முறைகேடுகளில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

முதல்வருக்கு கிடைத்த சம்பளம் என்ன?ஜெயலலிதா புது தகவல்

சென்னை : ""கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்பது மக்கள் அறிந்த விஷயம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதை தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க., என்பதை மறந்து, "கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தனது கணக்கை காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பலமுறை பேசி இருக்கிறார். உண்மையை சொல்லப் போனால் கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி. இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது, இவருக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்பது மக்கள் அறிந்த விஷயம்.இப்படிப்பட்ட கருணாநிதி, இப்போது திடீரென கணக்கு காட்டுகிறேன் என்ற தலைப்பில், தன் குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என புதிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

1946ம் ஆண்டு ஜன., 16ம் தேதி கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்ப படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டுமனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து தன் வசம் நகை, பாத்திரம் வகையறா 1,000 ரூபாய் இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார்.கருணாநிதி தன் அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறி இருக்கிறார். மணமகள் படத்திற்கு கதை வசனம் எழுதி 10 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், இருவர் உள்ளம் படத்திற்காக 20 ஆயிரம் ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு. சி.ஐ.டி., காலனியில் ஒரு பங்களா. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா. மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாளிகைகள், பண்ணை வீடுகள். அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள், வர்த்தகமாடி கட்டடங்கள், இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. தமிழரசு, முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில் பேரன்கள், பேத்திகள் உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆடம்பர மாளிகைகளும், ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் விளங்கி கொண்டிருக்கிறது. கருணாநிதியின் பொய் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் இனிபேசுவதற்கு அதிகம் தயங்குவர்

வாஷிங்டன்:"சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட "விக்கி லீக்ஸ்' ஆவணங்களால், அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும், துணைச் செயலர், முதல் செயலர் வரையிலான அனைவரின் பணியும் இப்போது கடினமாகி விட்டது. அவர்கள் இன்னும் சிறிது காலத்திற்கு தகவல் சொல்ல தயங்குவர்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் "விக்கி லீக்ஸ்' இணையதளம், அமெரிக்க வெளியுறவு கொள்கை தொடர்பான 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி கூறியதாவது:இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் இருந்து அன்றாட நடவடிக்கைகள் குறித்த செய்திகளை பெறுவது மிகவும் கடினமாக தான் இருக்கும். முன்பு, மிக சுதந்திரமாக பேசிய அதிகாரிகள் இனி, விஷயங்களை சொல்ல தயங்குவர். இதற்கிடையே தான் எங்களது பணியும் தொடர வேண்டியிருக்கிறது.இதுகுறித்து நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்படாத பிறநாட்டு தலைவர்களும், இதுகுறித்து கவலையுடன் இருக்கின்றனர். எனினும் தூதரக வேலைகளை நாங்கள் தொடர்வோம். தொடர்ந்து பேசி வருவோம்.இவ்வாறு க்ரவுலி தெரிவித்தார்.

ரகசியம் சொன்ன உதவியாளர்:விக்கி லிக்சினால் அம்பலம்

பெர்லின்:"ஜெர்மனியில் ஆட்சியில் இருந்து வரும் கூட்டணி அரசு குறித்த ரகசியங்களை, அமெரிக்கத் தூதரகத்திடம் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்தார்' என்று, "விக்கி லீக்ஸ்' வெளியிட்ட செய்தியை அடுத்து, அந்த உதவியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஜெர்மனியில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், விடுதலை ஜனநாயகக் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சியில் உள்ளன. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சித் தலைவரான ஆஞ்சலா மெர்க்கெல் தான் தற்போதைய ஜெர்மனி அதிபர்.

அமெரிக்க அணு ஆயுதங்களை ஜெர்மனியில் வைத்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆஞ்சலாவுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதுகுறித்த தகவல்களை, ஜெர்மனி வெளியுறவு அமைச்சரான கிடோ வெஸ்டர் வெல்லே என்பவரின் உதவியாளரான ஹெல்மட் மெட்ஸ்னர் என்பவர், ஜெர்மனிக்கான அமெரிக்கத் தூதர் பிலிப் மர்பியிடம் தெரிவித்துள்ளார்.இவ்விவரங்களை பிலிப் மர்பி, 2009, அக்டோபரில் அமெரிக்கத் தலைமையகத்திற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகவல், சமீபத்தில் வெளியான, "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.இதையடுத்து, அமைச்சர் வெஸ்டர் வெல்லேயின் செய்தித் தொடர்பாளர் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், ஹெல்மட் மெட்ஸ்னர், ரகசியங்களை உளவறிந்து சொன்னதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

கோடீஸ்வர நாடுகளில் சீனாவுக்கு மூன்றாமிடம்

பீஜிங்:கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில், சீனா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாம் இடத்திலும் உள்ளன.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், 2009ல் சீனாவில், ஆறு லட்சத்து 70 ஆயிரம் குடும்பத் தலைவர்கள் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 2008ஐ விட இது 60 சதவீதம் அதிகம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், "சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி, தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முதலீட்டு சந்தையின் வளர்ச்சி ஆகியவையே சீனாவின் இந்த வேகமான வளர்ச்சிக்கு காரணம்' என்றார்.இதுகுறித்து அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:லட்சம் கோடி வைத்திருப்பவர்கள் (பில்லியனர்) அமெரிக்காவில் 117 பேரும், சீனாவில் 64 பேரும் உள்ளனர். இதில் சீனா இரண்டாமிடத்தில் இருக்கிறது.

சீனாவில் நிர்வாக இயக்குனர்கள், தொழில்முறை முதலீட்டாளர்கள், அதிக பணவசதி படைத்த தனிநபர்கள் போன்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் ரியல் எஸ்டேட், உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய துறைகளை தவிர, மருந்து தயாரிப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொழில் முனைவோர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர்.செல்வ வளம், சீனாவின் கடற்கரைப் பகுதிகள் தவிர, சீனா முழுவதும் உள்ள இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் பரவி வருகிறது.

2009ல் குவாங்டாங், ஷீஜியாங், ஜியான்சு, ஷான்டாங் ஆகிய மாகாணங்களிலும், பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களிலும் வசிப்பவர்களில் பாதிக்கு மேல் கோடீஸ்வரர்கள் தான்.அதேநேரம், மத்திய மற்றும் மேற்கு பகுதி சீனாவில் முதலீடு அதிகரிப்பது என்பது, சீனாவின் 12வது ஐந்தாண்டு திட்டக்காலமான 2011ல் இருந்து 2015க்குள் நடக்கும். ஆனால் சீனாவின் மொத்த மக்கள் தொகையில் இந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெறும் 0.2 சதவீதம் மட்டும் தான்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய சி.பி.ஐ., இணையதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாகிஸ்தானின் சில்மிஷவேலை


 
புதுடில்லி: இந்தியாவின் முக்கிய அங்கமான சி.பி.ஐ., அமைப்பின் இணையதளத்தை பாகிஸ்தான் நாசப்படுத்தியுள்ளது. இன்றைய கம்ப்யூட்டர் உலகில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக இருப்பது அந்த அமைப்பின் இணையதளம்தான்.
இந்தியாவின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு துறை ( சி.பி.ஐ.,)யின் இணையதளத்தில் அது எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிடப் பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஒரு உயிர்நாடியான இணையதளத்தில் பாகிஸ்தான் கை வைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சி.பி.ஐ., இணையதளத்தை திறந்தால் பாகிஸ்தான் சைபர் ராணுவ மெசேஜ் வருகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெயரில் வரும் இந்த விவகாரம் காரணமாக சி.பி.ஐ., இணையதளம் தற்போது செயல் இழக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஒரு வழியில தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவு பிரிவினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்த முயற்சி நமது பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டது. மும்பை தாக்குதல் நாளான 26 / 11 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவு படை தகவல்கள் மூலம் இந்தியா முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியது. எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் முடிந்தது.

பாகிஸ்தான் சிந்தாபாத் கோஷம் : இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு ஊழல் விவகாரங்களை விசாரித்து வரும் சி.பி.ஐ., இணையதளம் நாசப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை திறந்தால் பாகிஸ்தான் சைபர் ராணுவ பிரிவு சார்பில் ஒரு மெசேஜ் வருகிறது. இதில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் இணையதளங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும், பாகிஸ்தான் சிந்தாபாத் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சி.பி.ஐ., சார்பில் வைக்கப்பட்டிருந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் அமைப்பினருடன் இணைந்து செயல்படும் பாதுகாப்புமிக்கது சி.பி.ஐ., இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல 270 இணையதளங்களை பாகிஸ்தான் முடக்கியிருப்பதாக தெரிகிறது.

Friday, December 3, 2010

அடிப்படை வசதி இல்லாமல் அரசு பள்ளி : மாணவர்கள் தவிப்பு

மடத்துக்குளம் : பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், அரசு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் கல்வித்தரம் குறைவதோடு, சுகாதாரக்கேடால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் 60 க்கும் மேற்பட்ட அரசுபள்ளிகளில் 10 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப் பகுதியிலுள்ள சில பள்ளிகள் தவிர 90 சதவீத பள்ளிகளில் குடிநீர், கழிப்பிடம், சுற்றுப்புற சுகாதாரம் கடைபிடித்தல், உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. பல்வேறு திட்டங்கள், நிதி உதவிகள், மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிய வகுப்பறைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்படுகிறது. ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்து வருகிறது.
குப்பம்பாளையம்: கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்தப்பட்டும் இது வரை அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். கொழுமம் மற்றும் குப்பம்பாளையம் பகுதியில் உள்ள சாக்கடைகள் அனைத்தும் இணையும் இடமாக பள்ளி வளாகம் உள்ளது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் புதிய வகுப்பறைகள் மட்டும் கட்டப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. கழிப்பிட வசதி இல்லாத நிலையில் மேல்நிலை வகுப்பு மாணவிகள் சிரமப்படும் "அவலநிலை' உள்ளது.
இது குறித்து பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்தும், நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பள்ளி வளாகம் முழுவதும் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி பன்றிகள் மேய்ந்து வருகின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு மாணவர்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உருவாயியுள்ளது.
மடத்துக்குளம்: இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல வகுப்பறைகள் கதவுகள் இல்லாமல் நடந்து வருகின்றன. கதவுகள் இல்லாத வகுப்பறைகளுக்குள் கால்நடைகள், விஷபூச்சிகள் சென்று தங்குவதால் மாணவர்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பள்ளிவளாகத்தில் பல இடங்களிலுள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்கு அலைய வேண்டியதுள்ளது.
கிராம பள்ளிகள்: மடத்துக்குளம் பகுதியிலுள்ள கண்ணாடிப்புத்தூர் நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை தரமில்லாத காரணத்தால் வகுப்பறைகளில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. நீலம்பூர் தொடக்கப்பள்ளியில் சத்துணவுக்கூடம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையிலுள்ளது. சின்னப்பன் புதூர் தொடக்கப்பள்ளிக்கு போக்குவரத்து வசதி இல்லை. கழுகரை அரசு நடுநிலைபள்ளியில் சுற்றுச்சுவர், கழிப்பிட வசதி கிடையாது. சாக்கடைகள் பள்ளி வளாகத்துக்குள் செல்லும் நிலையும் உள்ளது. பல கிராமப்பள்ளிகளில் இருக்கைகள் இன்றி மாணவர்கள் தரையில் அமர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. ஆனால் பல்வேறு அரசு திட்டங்களின் வாயிலாக பல கோடிநிதி ஒதுக்கீடு செய்தும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளும், கல்வித்தரமும் குறைந்து வருவது குறித்து பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கல்வி நிர்வாகத்தினர் நேரடியாக அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். புதிய நிதிகளை வைத்து அரசுபள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
"திட்ட மதிப்பீடு தயாரிப்பு' : மடத்துக்குளம் பி.டி.ஓ.,மாதி கூறியதாவது: அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மராமத்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றிய பொறியாளர்களால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.

ரூ.5.5 கோடியில் புத்துயிர் பெறுகிறது அரசு அச்சக கட்டடம்

 வள்ளலார் நகர் : சென்னை அரசு அச்சகக் கட்டடத்தின் ஒரு பகுதி, சில வாரங்கள் முன் இடிந்து விழுந்ததையடுத்து, பாழ டைந்த கட்டடத்தை 5.5 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.சென்னை தங்க சாலையில் அரசு மைய அச்சகம் உள்ளது. "பட்ஜெட்' திட்ட அறிக்கை, சட்ட மசோதா புத்தகங்கள், அரசாணை குறிப்புகள் உள்ளிட்ட ஆவணங்களும் அச்சடிக்கப்படுகின்றன.மூன்று ஷிப்டுகளில் 700 பேர் பணியாற்றுகின்றனர். அச்சக வளாகத்தில், பட்ஜெட் செக்ஷன், ரெட் பில்டிங், கேன்டீன், காகிதக் கிடங்கு, மருத்துவமனை என பல கட்டடங்கள் உள்ளன.
மிகவும் பழமையான கட்டடங்களை, பயன்படுத்த முடியாத நிலையில் மூடி வைத்துள்ளனர். இதில் வாட்ச்மேன் அறை, நேரக் கட்டுப்பாட்டு அறை கட் டடம், நவ., 9ம் தேதி திடீரென இடிந்தது. அதிஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை.பத்து நிமிடம் தாமதமாகியிருந்தாலும், முதல் "ஷிப்டு' முடிந்து ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கி, உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்.அச்சகத்தின் அனைத்துக் கட்டடங்களும் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதால், உயிர்பலி ஏற்படும் முன் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டுமென ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தமிழக அரசு 5.5 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.அச்சகத்துறை இயக்குனர் விவேகானந்தன் கூறும்போது, "நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஓரிரு மாதத்தில் பணிகள் துவங்கும்' என்றார்."அச்சகத்திற்கு புதிதாக பல லட்ச ரூபாய்க்கு வாங்கிய "மிஷின்' மழைநீர் ஒழுகி, சேதமாகும் நிலை உள்ளது. மழைநீர் ஒழுகுவதால் கிடங்கில், காகித ரீம்கள் நனைந்து பிரின்டிங்குக்கு லாயக்கற்றதாக மாறுகிறது."டெஸ்பேட்ஜ்' அறை, நேரக்கட்டுப்பாட்டு அறை, மருத்துவமனை, கேன்டீன் நிலையும் மோசமாக உள்ளதால் புதிய கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ரகசிய கேமரா வைக்க திட்டம்: அரசின் கொள்கை முடிவுகள், சட்ட ரீதியான பல ஆவணங்கள் இங்குதான் அச்சடிக்கப்படுகின்றன.மின்னணுப் பெட்டிகள் பயன்படுத்தாதபோது, தேர்தல் ஓட்டுச் சீட்டுகள், வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பம் மற்றும் ரகசிய ஆணவங்களும் அச்சடிக்கும் பணி நடந்து வருகின்றன.இங்கு டி.எஸ்.பி., அந்துஸ்து பெற்ற அதிகாரி தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஆனாலும், சில நேரங்களில் அச்சகத்தில் இருந்து ஆவணங்கள் "லீக்' ஆவதாக குற்றச்சாட்டு எழுகிறது.இதனால் அச்சக பணிகளை பார்வையிடவும், வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வாயில் பகுதி, குடோன், டெஸ்பேட்ஜ் அறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் ரகசிய கேமரா பொருத்த அச்சகத்துறை திட்டமிட்டுள்ளது.

பூங்காங்களுக்கு ரூ. 24.65 லட்சத்தில் சுற்றுச்சுவர்

உள்ளகரம் : உள்ளகரம்-புழுதிவாக்கம் நகராட்சியில் உள்ள, பூங்காக்களுக்கு 24.65 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பது, என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உள்ளகரம்-புழுதிவாக்கம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கிரிஜா முன்னிலை வகித்தார். துணை தலைவர் குமரமணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 9.5 லட்ச ரூபாய் செலவில் நகராட்சி பொது நிதி மூலம் சாலை அமைப்பது; சாரதிநகர், அன்னை தெரசா நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள, பூங்காக்களுக்கு 24.65 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பது; என்.எஸ்.சி., போஸ் சாலையை 16.50 லட்ச ரூபாய் செலவில் அமைப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளம் பெண்களை போதை மருந்து கடத்த பேஸ்புக் வாயிலாக ஆள் தேர்வு

கோலாலம்பூர்:  மலேஷியாவில் இளம் பெண்களை போதை மருந்து கடத்தல் தொழிலுக்கு பேஸ் புக் வாயிலாக  வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக பரபரப்பு புகாரினை அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இது குறித்து  மலேஷிய வெளியுறவு துணை அமைச்சர்  ரிச்சர்ட்ரையாட் கூறுகையில், மலேஷியாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் அதிகரித்து வருகிறது. இவர்கள் சிண்டிகேட் அமைத்து  போதை மருந்தினை கடத்தி வருகின்றனர்.  இவர்களில் ஆப்ரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். இவர்கள் சீனா, ஜப்பான், லத்தீன் அமெரி்க்கா நாடுகளுக்கு போதை மருந்து கடத்துகி்ன்றனர். மேலும் இவர்கள் மீது மலேஷிய போலீசார் கண்காணித்து வந்தாலும்  அதனை முறியடிக்க தற்போது மலேஷிய நாட்டு இளம் பெண்களை பேஸ் புக் எனும் சமூக வலைதளம் வாயிலாக வேலைக்கு ஆள் எடுப்பது போன்று நியமித்து கடத்தல்தொழிலில் ஈடுபடுத்துகி்ன்றனர்.  இவர்கள் டூரிஸ்ட் வழிகாட்டி என  தங்களை அறிமுகப்படுத்தி இத்தகைய தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றார்.

பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டாலும்புற்றுநோய் ஆபத்தை தடுக்க முடியாது:ஆய்வில் தகவல்

 
 
லண்டன்:"பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை' என்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு, புகையிலை பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயை நோயை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த கருத்துக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.புற்றுநோய் மற்றும் அது தொடர்பான உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் முடிவு சமீபத்தில், பல்கலைக்கழகத்தின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:புற்றுநோயை, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. முறையான உணவு பழக்கவழக்கங்கள், சிகிச்சை முறை உள்ளிட்டவற்றின் மூலம் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும். காய்கறிகளும், பழங்களும் நமது உடல்நலத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், புற்றுநோயை அவை கட்டுப்படுத்தும் என்பது நிரூபிக்கப்படவில்லை.

புகைப்பிடிக்கும் பழக்கம், மது, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களே புற்றுநோய்க்கு முக்கிய காரணம்.உடல் பருமன் குடல், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில், புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பதால், நுரையீரல், வாய், குடல் பகுதிகளில் புற்றுநோய் பாதிக்கும். நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், குணமாக்கக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் தோண்டி எடுப்பு

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் முஸ்லிம் இடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, கிறிஸ்துவ இடுகாட்டில் புதைக்கப்பட்டது.பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் வசிப்பவர் பிரேம்கிஷன். இவரது 10 வயது மகள் சுமன் கடந்த மாதம் இறந்து விட்டாள். ராவல்பிண்டியில் உள்ள ரட்டா அம்ரால் சுடுகாட்டில் சுமனின் உடல் புதைக்கப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் ஒன்று திரண்டு, இந்து சடலத்தை முஸ்லிம் இடுகாட்டில் புதைப்பது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது, என கூறி பிரச்னையை பெரிதாக்கின.

இடுகாட்டு நிர்வாகத்தினர் தவறுதலாக சிறுமியை புதைத்து விட்டதாக கூறினர்.இந்த பிரச்னை மதகலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டதால், இடுகாட்டு நிர்வாகம், பிரேம் கிஷனை அழைத்து சிறுமியின் சடலத்தை வேறு இடுகாட்டில் அடக்கம் செய்யும் படி கேட்டுக்கொண்டது. சிறுபான்மையினத்தை சேர்ந்த சடலம் என்பதால் வேறு வழியின்றி ஒரு மாதம் கழித்து சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு அருகே உள்ள கிறிஸ்தவ இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகர சோதனை

 
 
பாலாசூர் : ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடந்த 2001ல் முதன்முதலாக ரஷ்யாவின் உதவியுடன் பிரமோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. ஒலியின் வேகத்தை விட, 2.8 மடங்கு அதிவேகமாக செல்லக்கூடிய இந்த ஏவுகணை, தற்போது கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஒடிசாவின் சண்டிப்பூர் ஏவுதளத்தில் நேற்று நடத்தப்பட்டது. ஒன்பது மீட்டர் நீளமுள்ள பிரமோஸ் ஏவுகணை 300 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து கொண்டு 290 கி.மீ., வரை பாய்ந்து சென்று தாக்கவல்லது. சண்டிப்பூர் ஏவுதளத்தில் இந்த ஏவுகணை சோதனை நேற்று நடந்ததால் சுற்றியுள்ள ஆறு கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். 401 குடும்பங்களை சேர்ந்த 3,280 பேரும், அவர்களின் கால்நடைகளும் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு ஒரு நாளைக்கு தலா 165 ரூபாயும், குழந்தைகளுக்கு தலா 95 ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்காக தலா 50 ரூபாய் வழங்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணையை நிலம், நீர், ஆகாயம் ஆகிய மார்க்கங்களிலிருந்து ஏவி எதிரியின் இலக்கை தாக்கவல்லது.
 

தர்மபுரியில் பேசும் குப்பைத் தொட்டி அறிமுகம்

 
தர்மபுரி : தர்மபுரியில் இன்று மாலை 5 மணிக்கு கோட்டை ஆர்.கே., திருமண மண்டப வளாகத்தில் இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை சார்பில் பேசும் குப்பைத் தொட்டி அறிமுகம் நடக்கிறது.

மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவர், தர்மபுரியில் மாணவர்களுக்காக இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். அறக்கட்டளை மூலம் எளிய பொருட்கள் கொண்டு, பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்களே எளிதில் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரையில் ரோபோ துப்பாக்கி, மிதக்கும் படகு, வாட்டர் படகுகள் உள்ளிட்ட 40 வகையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளார். அறக்கட்டளை மூலம் தர்மபுரியில் மாணவர்களுக்கு அறிவியல் மியூசியம் அமைத்து இந்த கண்டுபிடிப்புகளை மாணவர்கள் பார்வையிட்டு, இதே போன்று புதிய கண்டுபிடிப்புகளை அவர்களே எளிய பொருட்கள் மூலம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவரது முயற்சிக்கு உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம் மூலம் தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளி யூனியன் நாகர்கூடல் புவிதம் கல்வி மைய நிர்வாக இயக்குனர் மீனாட்சி உமேஷ் கல்வி மையத்தின் நிலத்தை மியூசியம் அமைக்க கொடுத்துள்ளார். இந்த மியூசியத்தில், 200 வகையான புதிய கண்டுபிடிப்புகளை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அறக்கட்ளை சார்பில், பேசும் குப்பைத் தொட்டியை ஜெயபாண்டியன் இன்று அறிமுகம் செய்கிறார். இந்த தொட்டியை பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைப்பதோடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஒலி அமைப்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொட்டியை வடிவமைத்துள்ளார். தற்போது, இரண்டடி கொண்ட, "டஸ்ட் பின்னில்' மாதிரியாக அறிமுகம் செய்துள்ள இந்த தொட்டி, நம் தேவைக்கு ஏற்ப பெரிய தொட்டிகளாவும் பயன்படுத்த முடியும். இந்த தொட்டி உள்ள இடத்தில் இருந்து 20 மீ., தொலைவில் மனிதர்கள் செல்லும் போது, திடீரென மூடப்பட்டிருக்கும் தொட்டி திறக்கப்பட்டு, "குப்பைகளை தொட்டியில் போடுங்கள்; வெளியில் போடாதீர்கள்', "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்' உள்ளிட்ட சுகாதாரம் குறித்த வாசகங்கள் ஒலிக்கிறது. 20 மீ., தொலைவில் இருந்த நாம் விலகி விட்டால், தொட்டி தானாக மூடிவிடுவதோடு, விழிப்புணர்வு ஒலியும் அடங்கி விடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

சாதாரண பிளாஸ்டிக், "டஸ்ட் பின்னில்' சொல்நடவால்வு (மின் மாற்றி) மூலம், 20 மீ., தொலைவில் மனிதன் உள்ளிட்ட உயிரூட்டமுள்ளவர்கள் நடந்துச் செல்லும் போது, நம் உடலில் இருந்து வெளியேறும் மின் ஒலி அலைகள் மூலம் கவரப்பட்டு, தொட்டி தானாக திறக்கிறது. இதே போன்று பஸ் ஸ்டாண்ட் மற்றும் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதை பொருத்தினால், அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் வந்தவுடன் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிப்பது போலவும் இதை பயன்படுத்தலாம். வனப்பகுதியில் காட்டு விலங்குகள் விவசாய நிலத்தில் நுழையாமல் இருக்க இது போன்று பல்வேறு பயங்கர சத்தம் (பட்டாசு வெடிக்கும் சத்தம், முரசு அடிக்கும் சத்தம்) எழுப்பும் வகையில் பதிவு செய்து பயன்படுத்தலாம்.

இது குறித்து ஜெயபாண்டியன் கூறியதாவது: அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு அமைக்கப்படும் மியூசியத்தில் உள்ள கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு, அதன் செய்முறை விளக்கங்களை அறிந்து கொண்டு, தாங்களே இது போன்று வேறு வடிவங்களில் செய்ய முயற்சிகள் செய்யலாம். மியூசியத்தில் இடம் பெறும் 200 வகையான கண்டுபிடிப்பு குறித்த அனைத்து விவரங்களும் மாணவர்களுக்கு விளக்கி அவர்களை புதிய கண்டுபிடிப்புக்கு தூண்டுதலாக இருக்கவே இந்த மியூசியத்துக்கான பணி நடந்து வருகிறது. அறக்கட்டளை மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மியூசியத்தில் இடம் பெற விரும்புவோர், 96982 - 48008 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஜெயபாண்டியன் கூறினார்.

லஞ்சத்தில் கொழிக்கிறது பெங்களூரூ நகரம்

 
 
பெங்களூரூ: லஞ்சம் பெறுவதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பெங்களூரூ அரசு அலுவலர்கள் நிரூபித்து வருகின்றனர். நாட்டில் மத்திய மாநில அளவில் உள்ள அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதில் முன்னிலை வகிக்கிறார்கள் என்றால் பெங்களூரூவில் உள்ள அரசு அலுவலகங்கள் லஞ்சம் பெறுவதில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் லஞ்சம் வெகுவளர்ச்சி கண்டு வருகிறது என்பது கவலை தரும் விஷயமாக உள்ளது. 

சமீபத்திய  ஆய்வின் படி இந்தியாவில் மும்பை, சென்னை, புனே உட்பட 200 பெரிய, நடுத்தர,மற்றும் சிறிய நகரங்களை காட்டிலும் முன்னணியாக உள்ள  பெங்களூரூவில் காசு கொடுத்தால் தான் வேலையாகும் என்ற நிலை உள்ளது.

இந்தியாவின் குளுமையான நகரம், முன்னணி ஐ.டி.,நிறுவனங்கள் அமைந்துள்ளது என அனைத்து விதத்திலும் புகழ்பெற்று விளங்கும் இந்த நகரம் லஞ்சம் பெறுவதிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

அரசு அலுவலகங்களில் இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்பதை நிர்ணயித்துவிடலாம் என முன்னர் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வெறுப்பின் உச்சத்தில் ஒரு கருத்தை கூறியது நினைவிருக்கலாம். இதனை பின்பற்றுகிறது பெங்களூரூ நகரம்.

இந்த நகரத்தை சுற்றிலும் சுமார் 33 சப் ரிஜிஸ்டர் ஆபீஸ்கள் உள்ளன. இந்த ஆபீஸ்களில் ரியல் எஸ்டேட் பத்திரப்பதிவு மற்றும் திருமணப்பதிவு போன்ற பல்வேறு பதிவுகள் மூலம் மாதம் தோறும் குறைந்த பட்சம் 3 கோடி ரூபாய் லஞ்சப்பணமாக புரள்வதாக மாநில ஐகோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்

 
 
லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10 சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி, போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.

40 கர்ப்பிணி பெண்களுக்கு ஹெச்.ஐ.வி.,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 40 கர்ப்பிணி பெண்களுக்கு ஹெச்.ஐ.வி., தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது; 25 குழந்தைகள் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக எய்ட்ஸ் தினம் ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது. ஈரோடு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரகுநாதன் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 67 ஆயிரத்து 204 பேருக்கு ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 958 பேர் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்களில் 40 கர்ப்பிணி பெண்கள், 25 குழந்தைகள் அடக்கம். கூட்டு மருந்து சிகிச்சை மையத்தில் 2,511 பேர் பதிவு செய்துள்ளனர். 1,467 பேர் கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு கலெக்டர் சவுண்டையா பேசியதாவது: மனித சமுதாயம் ஏதாவது ஒரு நோயால் பயப்பட்டுக் கொண்டே போகிறது. பட்டினி சாவு, காலரா நோய் தாக்குதல், அம்மை நோய் போன்றவையால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அவை கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது எய்ட்ஸ் நோயை கண்டு பயப்படுகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எய்ட்ஸ் விழிப்புணர்வு கிராம மக்களிடையே ஏற்படவில்லை. ஈரோடு, சேலம், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு மற்ற மாநிலங்களை சேர்ந்த டிரைவர்கள் வருகின்றனர். அவர்களின் மூலமும் எய்ட்ஸ் பரவுவதாக கூறப்படுகிறது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்குவதோ, புறக்கணிப்பதோ இல்லாமல், அவர்கள் மீது அன்பு செலுத்தி வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நாகராஜன் பேசுகையில், ""எய்ட்ஸ் விழிப்புணர்வு பணிக்காக ஈரோடு அரசு மருத்துவமனை மாநில அரசின் பரிசு பெற்றுள்ளது,'' என்றார். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பேசிய நம்பியூர் சாவக்கட்டுபாளையம் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி மாணவியர் சவுபர்னிகா, கலைமணி ஆகியோருக்கு கலெக்டர் சவுண்டையா பரிசு வழங்கினார். காசநோய் துணை இயக்குனர் ராஜசேகரன், தன்வந்திரி செவிலியர் கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் கணபதி, டாக்டர் நாகராஜன், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்க திட்ட மேலாளர் சிவமுருகன், செஞ்சிலுவை சங்க மாவட்ட மேலாளர் சரவணக்குமார், வேளாளர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர், எம்.ஆர்.கலர் லேப் நாராயணன் ஆகியோர் பேசினர்.

போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்

வாஷிங்டன் : அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், கடைசியாக அம்பலமாக்கியுள்ளது இலங்கை போர்குற்றம் பற்றியது. இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுக்கு எதிராக 7 மாத காலம் இறுதிகட்ட போர் நடந்தது. இந்தப் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும், சரணடைந்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்ட காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகின. ஆனாலும் அவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றே இலங்கை ராணுவமும், அரசாங்கமும் சப்பை கட்டு கட்டி வந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதியன்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் பட்ரீசியா புடனிஸ் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது போர் குற்றங்கள் நடந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் பட்ரீசியா ‌அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் எதிர்‌ப்பு : இலங்கை போர்குற்றங்கள் குறித்து அந்நாட்டு டி.வி. சேனல் ஒளிபரப்பிய‌தால் கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரிட்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இலங்கை தமிழர்கள் ராஜபக்ஷேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவரை கைது செய்ய‌க்கோரினர். இதனால் அவர் கைது செய்யப்படுவதாக பரபரப்பு வெளியானது. இந்நி‌‌லையில் தன்மீதான கைது நடவடிக்கை இல்லை என பிரிட்டன் அரசிடம் உறுதிமொழி பெற்றதைத்தொடர்ந்து ராஜபக்ஷே கைது நடவடிக்கையிலிருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. மேலும் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன

Thursday, December 2, 2010

Kulir 100 Degree

Boom - [ HD ]


Muthal Murai - [ HD ]


Manasellam Unnidum Kodthan - [ HD ]


Sirugendri Parakalam - [ HD ]


Hip Hop Hurray - [ HD ]


Sivaji songs - [ HD ]

Sahana - [ HD ]


Vajji Vajji - [ HD ]


Adhiradi - [ HD ]


Style - [ HD ]


Balleilakka - [ HD ]


Kathalan Songs - [HD ]

Ennavale Ennavale - [HD ]


Mukala Mukabula - [HD ]


Urvasi Urvasi - [HD ]


Pettai Rap - [HD ]


kadhalan Kollayile - [HD ]


Kaadhalan - [HD ]


Roja songs - [ HD ]

Puthu Vellai Mazhai - [HD ]


Inam Maaralaam - [HD ]


Kadhal Rojave - [HD ]


Enakku 20 Unakku 18 songs - [ HD ]

Askava - [ HD ]


Santhippoma - [ HD ]


kama kama - [ HD ]


Edho Edho Ondru - [ HD ]


Vaanam Tamil songs





Movie Name : Vaanam
Year : 2010
Cast : Silambarasan, Bharath, Anushka Shetty, Prakash Raj, Sneha Ullal, Vega Tamotia, Santhanam, Sonia Agarwal...
Music Director : Yuvan Shankar Raja
Director : Krish
Producer : Ganesh Janardhanan, Githan Ramesh
Written : Krish
Lyrics : Silambarasan
English Lyrics : Yuvan Shankar Raja


Download in a Single File : Vaanam 320 Kbps Mp3 Songs in Single File

Download in a Single File : Vaanam 128 Kbps Mp3 Songs in Single File





Karuthakannan C/O Rekla Race Tamil songs

Karuthakannan C/O Rekla Race          

Movie Name : Karuthakannan C/O Rekla Race
Year : 2010
Cast : Senthil Anandhan, RK Sundar, Suresh...
Music Director : Senthil
Banner : Roshan Films International
Director : A Senthil Anandhan
Producer : V Rishiraj, GB
Lyrics : Senthil



Download in a Single File : Karuthakannan C/O Rekla Race 320 Kbps

Download in a Single File : Karuthakannan C/O Rekla Race 128 Kbps


Gokulam Tamil songs

Gokulam Tamil songs


Movie Name : Gokulam
Year : 2010
Cast : Sharvanand, Padmapriya...
Music Director : Anoop Rubens
Banner: AS Productions
Producer : Nayeem, Ramakrishnan
Director : Chandra Siddarth
Lyrics : Thamizh Amuthan

Download in a Single File : Gokulam 320 Kbps Mp3 Songs in Single File

Download in a Single File : Gokulam 128 Kbps Mp3 Songs in Single File



Sami Pulla Tamil song

Movie Name : Sami Pulla
Year : 2010
Cast : Senthil Kumar, Kaushik, Asmitha, Seena...
Music Director : JK Selva
Banner : Max Cinema
Producer : AG Loganathan, Senthil Kumar
Director : K Ranga Rajan
Lyrics : Nandhalala (1), Thiraivannan (2,4), Dr Kruthiya (3), Kalai Kumar (5)

Download in a Single File :
Sami Pulla 320 Kbps Mp3 Songs in Single File

Download in a Single File :
Sami Pulla 128 Kbps Mp3 Songs in Single File


விக்கி லீக்ஸ் : சவுதி கவலைப்படவில்லை

துபாய் : "விக்கி லீக்ஸ்' விவகாரத்தில், வெளியான தகவல் குறித்து தங்களுக்கு கவலையில்லை என்று, சவுதி அரேபியா மற்றும் பக்ரைன் நாடுகள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் "விக்கி லீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம், சவுதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலர், ஈரான் மீது போர் தொடுக்கும்படி அமெரிக்காவை வற்புறுத்தியது தெரிந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம், சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒசாமா அல் நக்லி கூறுகையில்,"இந்த ஆவணங்கள் வெளிவந்தது, அவற்றின் நம்பகத் தன்மை ஆகியவை குறித்து, சவுதி அரேபியாவுக்கு எவ்வித கவலையும் கிடையாது. அரசின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடு தெளிவாகவே உள்ளது. இவற்றோடு அரசுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதால், இதுகுறித்து அரசு விளக்கமளிக்கத் தேவையில்லை' என்று தெரிவித்துள்ளார்.
பக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஷேக் காலித் பின் அகமது பின் முகமது கூறுகையில்,"அமைதியான நடவடிக்கைகளுக்காக அணு சக்தியை அனைத்து நாடுகளும் பயன்படுத்துவதை பக்ரைன் ஆதரிக்கிறது. அமெரிக்க அதிகாரிகளின் சொந்த ஆய்வுகளைத் தான் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன' என்று கூறியுள்ளார்.
வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பொதுச் செயலர் அல் அட்டியா கூறுகையில்,"அரபு நாடுகள் ஈரானைத் தாண்டி இஸ்ரேல் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இஸ்ரேல் அரபு நாடுகளின் முக்கிய எதிரி' என்று கூறியுள்ளார்.

தகவல் கசிவில் அமெரிக்க தொடர்பு : சீனா பகிரங்க புகார்

 
பீஜிங் : "விக்கி லீக்ஸ் ஆவணங்கள் வெளியிடுவதை அமெரிக்காவின் புலனாய்வு ஏஜன்சியான சி.ஐ.ஏ.,வால் தடுக்க முடியவில்லை. இதனால், அமெரிக்காவுக்கும், விக்கி லீக்சுக்கும் இடையில் மறைமுகத் தொடர்பு இருந்திருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது' என்று, சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.
சீனாவில் இருந்து வெளியாகும் ஒரே ஆங்கிலப் பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' தனது தலையங்கத்தில் இது குறித்து எழுதியிருப்பதாவது: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த "விக்கி லீக்ஸ்', அமெரிக்க வெளியுறவு தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க முற்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதை பார்த்தால், அந்த ஆவணங்கள் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கத்தான் செய்கிறது. ரகசிய தகவல்களை எவ்வித செலவுமின்றி பெறுவதற்கு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்திருப்பதாக "விக்கி லீக்ஸ்' தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் புலனாய்வு ஏஜன்சியான சி.ஐ.ஏ.,வால் இந்த வெளியீட்டை தடுக்க முடியவில்லை. ஜூலியன் அசேஞ்ச் பிரபலமானவராக இருந்தும் இன்னும் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. "விக்கி லீக்சு'க்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் மறைமுகத் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.
 

காஷ்மீர் பிரச்னையை கதவடைத்தது எது? "விக்கி லீக்ஸ்' தரும் புது தகவல்

 
வாஷிங்டன் : "மும்பைத் தாக்குதல் தான், காஷ்மீர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தைக்கான கதவை அடைத்தது' என்று பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், ஆப்கன், பாக்.,கிற்கான சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக்கிடம் தெரிவித்ததாக "விக்கி லீக்ஸ்' ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2009, பிப்., 4 ல், ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹோல் ப்ரூக்கிற்கு, பாகிஸ்தானுக்கான அப்போதைய அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன் எழுதியிருந்ததாவது: காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தைக்கான பாதையை அடைத்தது மும்பைத் தாக்குதல் தான். ஆனால், காஷ்மீர் பிரச்னையை எதிர்கொள்வதில் தான் தனது பிராந்திய பாதுகாப்பு அடங்கியிருக்கிறது என்று பாக்., நம்புகிறது.
மும்பைத் தாக்குதலுக்கு பிறகாவது, பயங்கரவாதிகள் மற்றும் பழங்குடியினரை தனது வெளியுறவு கொள்கைக்கான ஆயுதமாக பயன்படுத்தும் போக்கை பாக்., ராணுவம் அல்லது ஐ.எஸ்.ஐ., மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்திய ராணுவத்தின் பதிலடியில் இருந்து தப்ப வேண்டுமானால், மும்பை விவகாரத்தில் போதுமான விசாரணையை பாக்., மேற்கொள்ள வேண்டும். காஷ்மீருக்கான சிறப்பு தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அமெரிக்காவை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்றில் பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டு ஆதரித்த போது, பாக்., வெளியுறவு அமைச்சகம் தான் அதை புறக்கணித்து விட்டது. எது எப்படியிருந்தாலும், தனிப்பட்ட முறையில், பாக்., அதிபர் சர்தாரியும், வெளியுறவு அமைச்சர் குரேஷியும், காஷ்மீர் பிரச்னையில் உங்கள் தலையீட்டை வரவேற்கின்றனர். இவ்வாறு அவர் எழுதியுள்ளதாக, "விக்கிலீக்ஸ்' ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் மொராக்கோ சிறுமி பலாத்காரமா : இந்தியர் மறுப்பு

துபாய் : விமான பயணத்தின் போது மொராக்கோ நாட்டு சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை என, துபாய் விமானத்தில் பயணித்த இந்தியர் தெரிவித்துள்ளார். துபாயில் கருமாராக பணிபுரியும் இந்தியர் சமீபத்தில் விமானத்தில் பயணித்த போது, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து, துபாய் கோர்ட்டில் இந்தியர் குறிப்பிடுகையில், " விமான பயணத்தின் போது மது அருந்தியது உண்மை தான். ஆனால், சிறுமியிடம் முறைகேடாக நடக்கவில்லை' என்றார்.
இது குறித்து மொராக்கோ சிறுமி குறிப்பிடுகையில், " நான் விமானத்தில் பயணித்த போது என்னுடைய பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அந்த இருக்கையில் இந்திய நபர் வந்து உட்கார்ந்து கொண்டு என்னிடம் வலுகட்டாயமாக பேசினார். அவர் பேசிய மொழி எனக்கு புரியவில்லை. நான் இயர்போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டே, ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தேன். அந்த நபர் என் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்தார். நான் சத்தம் போட்டு விமான பணிபெண்களை அழைத்தேன்' என்றார்.
இது குறித்து விமானபணிப்பெண் குறிப்பிடுகையில், " சிறுமியின் சத்தம் கேட்டு அருகே சென்று பார்த்தேன். அந்த நபர் நன்றாக குடித்திருந்தார். 15 வயது பெண்ணிடம் நடந்து கொண்ட முறைக்காக மன்னிப்பு கேட்டார். நாங்கள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தோம்' என்றார்.

முஷாரப் நாடு திரும்ப ஐக்கிய எமிரேட் ஆவல்முஷாரப் நாடு திரும்ப ஐக்கிய எமிரேட் ஆவல்

 
 இஸ்லாமாபாத் : முன்னாள் அதிபர் முஷாரப், நாடு திரும்பி அரசியலில் ஈடுபட சாதகமான ஏற்பாடுகளை செய்யும் படி, ஐக்கிய அரபு எமிரேட் அரசு, பாகிஸ்தான் அரசை வற்புறுத்தி வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தற்போது பிரிட்டனில் தங்கியுள்ளார். "கடந்த 2007ல் அவர், தலைமை நீதிபதி உள்ளிட்ட 60 நீதிபதிகளை வீட்டு சிறையில் அடைத்தது, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்' என, சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதேபோல அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனவே, அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் அவர் நாடு திரும்பி தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் "அனைத்து முஸ்லிம் லீக் கட்சி' என்ற பெயரில் கட்சியை துவக்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனசிர் படுகொலை தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுத் துறை 32 கேள்விகளை முஷாரப்புக்கு அனுப்பியது. இந்த கேள்விக்கு பதில் அளிக்க முஷாரப் மறுத்து விட்டார். முஷாரப் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை தவிர்க்கும்படி ஐக்கிய அரபு எமிரேட் அரசு, பாகிஸ்தான் அரசை நிர்பந்தித்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி துபாய், அபுதாபி சென்ற போது அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம், முஷாரப் தாயகம் திரும்ப சாதகமாக நடவடிக்கைகளை செய்து தரும்படி அறிவுறுத்தியது.
பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோரும் முஷாரப்புக்கு எதிரான போக்கை தவிர்க்கும்படி, ஐக்கிய அரபு அரசு அறிவுறுத்தியுள்ளது. முஷாரப் காலத்தில் நவாஸ் ஷெரீப், பெனசிர் புட்டோ ஆகியோருக்கு ஆதரவாக ஐக்கிய அரபு எமிரேட் அரசு இருந்தது. தற்போது முஷாரப்புக்கு ஐக்கிய அரபு அரசு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.

விலைவாசியை சமாளிக்க மாதம் ஒருவருக்கு ரூ.150 : சீனாவில் இலவசம்

 
பீஜிங் : சீனாவில் உள்ள ஏழைகள் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, அவர்களுக்கு மாதந்தோறும், நிதியுதவி அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி ஏறிவருகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள சாதாரண மக்கள் தடுமாறி வருகின்றனர். இதனால், அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை தணிக்கும் வகையில், சீனாவின் மேற்குப் பகுதிகளில் உள்ள வயதானோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு, மாதந்தோறும், 20 யுவான் (சீன நாணயம்) வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவின் நாணய மதிப்புக் கணக்குப்படி அமெரிக்க டாலர் மூன்றுக்கு 20 யுவான் சமம். ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 150 ரூபாய் வரை ஒருவருக்கு தரப்படும். இத்திட்டத்தில் முதல்கட்டமாக 46 லட்சம் பேர் பயனடைகின்றனர். இந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதில் 15 யுவான், சீன மத்திய நிதியமைச்சகம் தரும். மீதி அந்தந்த மாகாண அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.
Related Posts Plugin for WordPress, Blogger...