![]() சென்னை : கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஐந்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையெழுத்திட்ட, உட்பொதிந்த எழுத்து இல்லாத மகாத்மா காந்தி வரிசையில் நுண்ணிய நீர்க்குறியீட்டு எண்கள், சாளர முறையில் விட்டு விட்டு தெரியும்படி அமைந்த பாதுகாப்பு இழை, அச்சடிக்கப்பட்ட ஆண்டு மற்றும் ஊடாகத் தெரியும் மலர் வடிவ அமைப்பு கொண்ட ஐந்து ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது. தற்போது வெளியிடப்படவுள்ள நோட்டுகள், கவர்னரின் கையெழுத்தைத் தவிர, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நோட்டுகளைப் போன்று கூடுதலான, புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளின் வடிவம் மற்றும் பிற அம்சங்கள் அனைத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி இருக்கும். ரிசர்வ் வங்கி இதற்கு முன் வெளியிட்ட அனைத்து ஐந்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி தொடர்ந்து செல்லத்தக்கவை. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. |
Tuesday, November 30, 2010
புதிய ஐந்து ரூபாய் நோட்டு : வெளியி்டுகிறது இந்திய ரிசர்வ் வங்கி
Labels:
இத படிங்க முதல்ல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment