WELCOME TO JUST-ONECLICK.BLOGSPOT.COM ......... A few stories around Education on the UNICEF India

Tuesday, November 30, 2010

புதிய ஐந்து ரூபாய் நோட்டு : வெளியி்டுகிறது இந்திய ரிசர்வ் வங்கி

 
சென்னை : கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஐந்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையெழுத்திட்ட, உட்பொதிந்த எழுத்து இல்லாத மகாத்மா காந்தி வரிசையில் நுண்ணிய நீர்க்குறியீட்டு எண்கள், சாளர முறையில் விட்டு விட்டு தெரியும்படி அமைந்த பாதுகாப்பு இழை, அச்சடிக்கப்பட்ட ஆண்டு மற்றும் ஊடாகத் தெரியும் மலர் வடிவ அமைப்பு கொண்ட ஐந்து ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது. தற்போது வெளியிடப்படவுள்ள நோட்டுகள், கவர்னரின் கையெழுத்தைத் தவிர, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நோட்டுகளைப் போன்று கூடுதலான, புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளின் வடிவம் மற்றும் பிற அம்சங்கள் அனைத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி இருக்கும். ரிசர்வ் வங்கி இதற்கு முன் வெளியிட்ட அனைத்து ஐந்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி தொடர்ந்து செல்லத்தக்கவை. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் : ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிரடி

 
 புதுடில்லி : தமிழகத்தின் தலைநகரான சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில், விமான நிலையம் அமைக்க மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஏர்போர்‌ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சென்னை மீனம்பாக்கத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் கார்கோ எனப்படும் சரக்கு விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, வெளிமாநிலங்களிலிருந்து, சென்னைக்கு அதிகளவில் விமான சேவையை மேற்கொள்கி்ன்றனர், அதேபோல், வெளிநாட்டு நிறுவனங்களும், சென்னையில் அலுவலகங்கள் தொடங்க பெருமளவில் ஆர்வம் செலுத்தி வருவதால், அவர்களின் வருகையும் அதிகளவில் உள்ளது. இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள விமான நிலையம், வாடிக்கையாளர்களி்ன் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை என்றும், இதற்காக, மற்றொரு விமான நிலையம் அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இதுகுறித்த அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்திருப்பதாகவும், அவர்களின் முடிவுக்கு காத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநி்ல அரசிடமிருந்து தற்போது வரை வந்துள்ள தகவல்படி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக, அந்த பகுதியில் 4,820 ஏக்கர் நிலம் அடையாளம் கண்டிருப்பருப்பதாகவும், விரைவில் அந்த நிலத்தை கையகப்படுத்தி அங்கு புதிய விமான நிலையம் வரும் என்று எதிர்பார்க்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 கிலோ எடையை பல்லால் தூக்கி 30 மீட்டர் நடந்து சென்ற போலீஸ்காரர்

 
திண்டுக்கல் :  திண்டுக்கலில் புதிய உலக சாதனைக்காக, 40 கிலோ எடையை பல்லில் தூக்கி, 30 மீட்டர் தூரம் போலீஸ்காரர் ஒருவர் நடந்து சென்றார்.தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(29). இவர், திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர், பல்லால் எடைகளை தூக்கி சாதனை செய்து வருகிறார். கடந்த 2005ல் திருச்சி பட்டாலியனில் 35 கிலோ எடையை 60 வினாடிகளில் தூக்கினார். இது லிம்கா சாதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

 கடந்த 2007ல் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 60 கிலோ எடையை பல்லால் தூக்கினார். 2008 ல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினவிழாவில் 65 கிலோ எடையை தூக்கினார். 2009ல் திண்டுக்கலில் 68.5 கிலோ எடையை பல்லால் தூக்கி, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தார். இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் பள்ளி மைதானத்தில் 40 கிலோ எடையை, பல்லால் தூக்கி 30 மீட்டர் தூரம் நடந்து சென்றார். நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம், தலைமை ஆசிரியர் இக்னோசிஸ் பிரிட்டோ உட்பட பலர் பங்கேற்றனர். மாரியப்பன் கூறுகையில்,"" ஏற்கனவே 68.5 கிலோவை பல்லால் தூக்கி, சாதனை படைத்துள்ளேன். புதிய உலக சாதனைக்காக தற்போது பல்லால் தூக்கி நடந்து சென்று சாதனை செய்துள்ளேன்,'' என்றார்.

இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்

 
 
பூமியில் உள்ள உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ளது.

பால்வெளி மண்டலத்தில் ஒரு பகுதி பிரபஞ்சம், ஒரு காலகட்டத்தில் சுருங்கத் தொடங்கி, பின் அழிந்து விடும் என்றும், எல்லை இல்லா பிரபஞ்சம் குறித்த கோட்பாடு குறிப்பிடுகிறது. பால்வெளி மண்டலத்தின் எல்லை கள் குறித்து அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, வடிவியல் முறை கணிதப்படி கணக்கிட்டு வருகின்றனர். ஆனால், அதன் எல்லைகள் குறித்த உண்மைகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெருவெடிப்பு கொள்கையின் படி, பிரபஞ்சம் இயற்கையாகவே எல்லையில்லாமல் விரிவடைந்து செல்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "லட்சக்கணக்கானவர்கள் லாட்டரி சீட்டு வாங்கினாலும், அதில் ஒருவருக்குத் தான் முதல் பரிசு கிடைக்கிறது. அதுபோல, பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் பலர் அதிகளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்குத்தான் விண்வெளி குறித்த ரகசியங்கள் தெரிய வருகின்றன.

பால்வெளி மண்டலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் செயல்கள், மற்ற பிரபஞ்சங்களில் நின்று விட வாய்ப்புள்ளது' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபீல் பவுசோ. விரிவடையும் கொள்கையின்படி, பிரபஞ்சம் குறித்த சில கேள்விகளை விஞ்ஞானிகள் தவிர்த்து விடுகின்றனர். உதாரணமாக, நமது பிரபஞ்சம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. நமது பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் வாழும் சூழல் ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. "நமது பிரபஞ்சம் குறித்த கோட்பாடுகளை நாம் முன்னதாக பெற்றிருக்கவில்லை. எந்த கோட்பாட்டை நாம் விரும்பு கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் நல்ல எண்ணங்களை பெற்றிருக்கிறோம். மற்ற பிரபஞ்சங்களிலும் இதேபோன்ற எண்ணங்கள் தோன்றுமா என்பது தெரியவில்லை' என்று ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வான்இயற்பியல் விஞ்ஞானி சார்லஸ் லைன்வேவர் கூறுகிறார். பல்வேறு சூத்திரங்கள் மூலம் கணக்கிட்டதில் நமது பிரபஞ்சம் தோன்றிய 1,370 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்றும் இதன் இயக்கம் நின்று போக இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றும் ராபீல் பவுசோ மற்றும் அவரது குழுவினர் முடிவுக்கு வருகின்றனர்.

தற்போது நமது சூரியனுக்கு 457 கோடி வயது ஆகிறது. நடுத்தர வயதுள்ள நட்சத்திரமாக சூரியன் திகழ்கின்றது. இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயுட்காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த கால கட்டத்தில், சூரியனில் உள்ள வாயுகள் தீர்ந்து போய், அதன் வெளிப்புறம் சிவப்பாக, அச்சப்படுத்தும் வகையில் காட்சியளிக்கும். இறுதியாக விண்மீன் படலமாக மாறி விடும். அந்த நேரத்தில் பூமியின் விதியும் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஆனால், சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வேடிக்கை பார்க்கும் கல்வித்துறை... நடவடிக்கை எடுக்காத காவல்துறை...

 
பள்ளிகளில் மாணவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வழங்கப்படும் கடுமையான தண்டனைகள், ஆசிரியர்கள் அடித்து குழந்தைகள் துடிதுடித்து பலியாகும் சம்பவங்கள், வயதுக்கு வந்த மாணவியரை ஆபாசமாக பேசுவதால் நடக்கும் தற்கொலைகள், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளால் ஏற்படும் பிரச்னைகள்... இப்படி பட்டியலில் அடங்காத இந்த அவலங்களும், கொடூரங்களும் அவ்வப்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், நகரங்களிலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் நிகழும்போது, பெற்றோரும், பொதுமக்களும் கொந்தளிக்கும்போது, "நடவடிக்கை எடுக்கிறோம்' என, போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் கோரசாக சமாதானம் செய்வதும் அவ்வப்போது நிகழாமல் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் பெரும்பாலான குற்றங்களில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுவது தான் பெரும் கொடுமை. சம்பவங்களுக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதோ, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதோ போலீசாரும், கல்வித்துறையும் கடும் நடவடிக்கை எடுக்காமல், "பூசி மெழுகி' விடுவதால், குற்றம் செய்பவர்கள் குதூகலிக்கும் நிலைமை தமிழகத்தில் உள்ளது.

கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில், 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் துடிதுடித்து தீயில் கருகி சாம்பலான சம்பவம், தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. இதற்கு காரணமானவர்கள், சட்டத்தின் ஓட்டைகளை கண்டுபிடித்து "வெளியே' வந்துவிட்டனர். குழந்தைகளை பறிகொடுத்தவர்களின் வாழ்க்கை இன்று சூனியமாகி, நடமாடும் பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அளவிற்கு வன்முறைகளும், கொடூரங்களும் நடக்கும்போது, "யாருமே, இந்த அநியாயத்தை கேட்க மாட்டாங்களா? கயவர்களுக்கு கைவிலங்கு மாட்ட மாட்டார்களா?' என, பாதிக்கப்பட்டவர்கள் குமுறுவது உண்டு. இப்படிப்பட்டவர்கள், வாய்ப்பு கிடைக்கும்போது, தங்களுடைய ஆதங்கங்களை எல்லாம் ஒன்று திரட்டி கொட்டி விடுவர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய, பொதுமக்கள் விசாரணை கூட்டமும் இப்படித்தான் அமைந்தது.

ஷாந்தா சின்ஹா மற்றும் பல்வேறு நீதிபதிகள் அடங்கிய இக்குழு, சென்னையில் நேற்று முன்தினமும், தொடர்ந்து நேற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது. மாநிலம் முழுவதும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெற்று, அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என, தேசிய ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று அண்ணாசாலை தேவநேய பாவாணர் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தேசிய ஆணையத்தின் மீது நம்பிக்கை கொண்டு, ஏராளமான பொதுமக்களும், பல்வேறு சமூகநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் திரண்டு வந்திருந்தனர்.

மகளை பறிகொடுத்த தாய்: தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தாய், "நான் ஆயா வேலை பார்த்து, எனது மகளையும், மகனையும் கஷ்டப்பட்டு படிக்க வைச்சேன். எனது மகள் யோகதாரணி, ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தா. நல்லா படிப்பா. வகுப்பு, "லீடர்' அவதான். அப்படிப்பட்ட அவளை, ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு வாயால சொல்ல முடியாத அளவுக்கு அசிங்க, அசிங்கமா ஒரு லேடி டீச்சர் திட்டியிருக்காங்க. அவமானம் தாங்காம, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைச்சுகிட்டு இறந்துட்டா. அவ எழுதி வைச்ச கடிதம் மூலமாத்தான், இந்த தகவல் எங்களுக்கு தெரிஞ்சுது' என, அழுதார்.

பிஞ்சை இழந்த பெற்றோர்: மணப்பாறை அடுத்த, காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, "எனது மகள், பக்கத்துல இருந்த ஒரு தனியார் பள்ளியில யு.கே.ஜி., படிச்சிட்டு இருந்தா. வழக்கமா, நான்தான் பள்ளியில கொண்டுபோய் விடுவேன்; அழைச்சிட்டு வருவேன். ஒரு நாள் காலையில பள்ளியில விட்டுட்டு மாலையில போனா, குழந்தை வரலன்னு சொன்னாங்க. கேட்டா பதிலே இல்லை. மறுநாள், பக்கத்து பள்ளி தண்ணீர் தொட்டியில காயத்தோட பிணமா பார்த்தோம்' என கூறியவர், தொடர்ந்து பேச முடியாமல், அப்படியே கீழே சரிந்தார். அவரது மனைவி, "தண்ணீர் தொட்டியில முள் நிறைய இருந்துச்சு. அந்த முள் எல்லாம் என் மகள் உடம்புல குத்தி ரத்த காயமா, இறந்து கிடந்தா. அவளை, பள்ளி தலைமை ஆசிரியரோ, வகுப்பு ஆசிரியரோ யாருமே வந்து பார்க்கல. வகுப்பு ஆசிரியை அடிச்சதால தான், அவ இறந்திருக்கிறா. சம்பந்தப்பட்டவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் குழந்தை இறந்ததுக்கு நீதி கிடைக்கணும்' என, அவரும் அழுதார். இந்த காட்சியைக் கண்டு, விசாரணைக்கு வந்த ஒட்டுமொத்த மக்களும் கண் கலங்கினர்.

அதிகாரிகள் மவுனம்: இதேபோல், பலரும் தங்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட சம்பவங்களை, தேசிய ஆணையம் முன் தெரிவித்தனர். இதற்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், "நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என ஒற்றை வார்த்தையை பதிலாக தந்தனர். கல்வித்துறை அதிகாரிகளோ, "மவுன விரதம்' இருந்தனர். "குற்றங்களில் தொடர்புடையவர்கள் வசதியாக இருந்தால், தப்பி வெளியே வந்து விடுகின்றனர்; அதுவே, ஏழைகளாக இருந்து தவறே செய்யாவிட்டாலும், அவர்கள், "உள்ளே' வாடுகின்றனர்' என ஆணைய உறுப்பினர்கள் வேதனை தெரிவித்தனர்.
 

இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு

 
வாஷிங்டன் : உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றில் இந்தியா பற்றிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களும் உண்டு.

ஈரானின் அணு உலைகளை அழிக்கும்படி சவுதிஅரேபிய மன்னர், அமெரிக்காவை வற்புறுத்தியது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, "ஆல்பா டாக்' என பட்டப்பெயர் இட்டது போன்ற பல்வேறு பரபரப்புத் தகவல்கள் அவற்றில் அடங்கியுள்ளன. "விக்கி லீக்சின்' இந்தச் செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்குப் பெயர் பெற்ற "விக்கி லீக்ஸ்' இணையதளம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் அட்டூழியத்தை 90 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் மூலமும், ஈராக்கில் நடந்த அமெரிக்க அட்டூழியத்தை நான்கு லட்சம் ரகசிய ஆவணங்கள் மூலமும் வெளிப்படுத்தியது. இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை துரத்த ஆரம்பித்தது. சமீபத்தில் அவரைக் கைது செய்வதற்கு சுவிட்சர்லாந்து கோர்ட் ஒன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக ஜூலியன் சமீபத்தில் தெரிவித்தார். அவற்றை வெளியிடக் கூடாது எனக் கூறிய அமெரிக்கா, அவற்றைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மிரட்டலும் விடுத்தது. தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையும் விடுத்தது. ஆனாலும் சொன்னபடியே, ஜூலியன், பிரிட்டனில் இருந்து வெளியாகும், "தி கார்டியன்', நியூயார்க்கின் "தி நியூயார்க் டைம்ஸ்', ஜெர்மனியின் "டெர் ஸ்பைஜெல்', பிரான்சின், "லீ மாண்டே', ஸ்பெயினின் "எல் பைஸ்' ஆகிய ஐந்து பத்திரிகைகள் மூலம், இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை நேற்று முன்தினம் இந்திய நேரப்படி நள்ளிரவில் வெளியிட்டார். இந்த ஆவணங்கள் மூலம் உலக நாடுகளை அமெரிக்க கண் ணோட்டம், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஒற்றர்களாக வேலை பார்த்தது, சின்னச் சின்ன தீவுகளில் இருந்து தனது அமைச்சரவையில் உள்ள ஹிலாரி கிளின்டன் வரை அனைவரையும் அமெரிக்கா உளவு பார்த்தது என, அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளும் இப்போது வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளன.

ஆவணங்கள் கிடைத்தது எப்படி? ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வெளிப்புறப் பகுதியில் இருந்த அமெரிக்கப் படைத்தளத்தில் பிரேட்லி மேன்னிங் (22) என்ற வீரர், அமெரிக்க தூதரகங்களின் இணையதளங்களில் இருந்து மிக ரகசியமாக இந்த விவரங்களை "சிடி' யில் பதிவு செய்தார். இதற்காக ஒரு நாளில் 14 மணிநேரம் செலவிட்டுள்ளார். இப்படி எட்டு மாதங்களுக்கும் மேல் செலவிட்டு இவ்விவரங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 1.6 கிகாபைட்ஸ் கொண்ட அனைத்தையும் ஒரு "தம்ப் டிரைவ்' -ல் பதிவு செய்து, "விக்கி லீக்ஸ்' இணையதளத்திற்கு அளித்துள்ளார். ஏழு மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இவர், 2011ல் கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்.

இந்தியா பற்றிய ரகசிய ஆவணங்கள்: "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மூவாயிரத்து 38 ரகசிய ஆவணங்களும் உள்ளன. "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் இவற்றை வெளியிட்ட போது, உலகம் முழுவதும் அந்த இணையதளத்தை லட்சக்கணக்கானோர் பார்த்ததால், தொழில்நுட்ப ரீதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்தியா பற்றி என்னென்ன விவரங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவரவில்லை. எனினும், பாக்., பிரச்னை குறித்து ஆப்கனில் இந்தாண்டு துவக்கத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியா விலக்கி வைக்கப்பட வேண்டும் என துருக்கி விரும்பியதால், இந்தியா அழைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இரண்டாயிரத்து 278 ஆவணங்களும், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மூவாயிரத்து 325 ஆவணங்களும், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இரண்டாயிரத்து 220 ஆவணங்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் தினசரி நடவடிக்கைகள், கூட்டங்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாக்.,ன் யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சி: அணுகுண்டு தயாரிக்க உதவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாகிஸ்தானின் அணு உலையில் இருந்து எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்றதையும், அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையும் "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அந்த ஆயுதங்கள் தலிபான்களின் கைகளில் சிக்கிவிடக் கூடும் என அமெரிக்கா பயப்பட்டது. ஆனால், நேற்று பாக்., வெளியிட்ட அறிக்கையில் அணு ஆயுதங்கள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கடும் கண்டனம்: "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தனிநபர்கள், உலக நாடுகளின் அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என, அனைவரது உரையாடல்களையும் வெளியிட்டுள்ள "விக்கி லீக்சின்' இச்செயல், சட்டவிரோத மானது. இதனால் அமெரிக்க வெளியுறவு நலன்கள் மட்டுமல்லாது, அமெரிக்க கூட்டணி மற்றும் நட்பு நாடுகளின் நலன்களும் பாதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானை தாக்க சவுதி வற்புறுத்தல்

* அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் முனைந்துள்ள ஈரான் மீது போர் தொடுத்து, அதை அழிக்க வேண்டும் என சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா, பஹ்ரைன் மன்னர் ஹமாத், அபுதாபி மன்னர் ஷேக் முகமது ஆகியோர் தொடர்ந்து அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர்.  சவுதி மன்னர், "அந்தப் பாம்பின் தலையை வெட்டி விடுங்கள்' என ஈரான் குறித்து கூறியுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.

* ஐ.நா.,வில் பணியாற்றும் முக்கிய உயரதிகாரிகளின் டி.என்.ஏ.,சாம்பிள், கைவிரல் ரேகைகள் பற்றிய விவரங்கள், அவர்களின் இ-மெயில்கள், "பாஸ்வேர்டு'களும் அமெரிக்காவால் சேகரிக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

* சீனாவில் இயங்கிய "கூகுள்' இணையதளச் சேவைகளில் சில இன்டெர்நெட் திருடர்கள் ஊடுருவி ஆவணங்களைத் திருடியதன் பின்னணியில் சீன அரசு இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்பட்டது. அமெரிக்க அரசு, தொழிலதிபர்கள் மற்றும் தலாய் லாமா ஆகியோரின் கம்ப்யூட்டர்களில் சீன அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நெட் திருடர்கள் புகுந்து தகவல்களைத் திருடியுள்ளனர்.

* வடகொரியா அழிக்கப்பட்ட பின் ஒன்றிணைந்த கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்து, அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆலோசித்துள்ளன. இதற்காக சீனாவுக்கு சில வர்த்தக சலுகைகளை தென்கொரியா ஏற்படுத்தித் தர வேண்டும் என, அமெரிக்க தூதர் தென்கொரியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

* இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரண்டாண்டுகள் முன்பு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உயரதிகாரிகள், ஒசாமா பின்லாடனுக்கு எதிராகப் போர் தொடுப்பது பற்றி அமெரிக்கா தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்பினர்.

* ஆப்கன் துணை அதிபர் கடந்தாண்டு, ஐக்கிய அரபு எமிரேட்சுக்குச் சென்ற போது அவரை 240 கோடி ரூபாயோடு, அந்நாட்டு அதிகாரிகள் பிடித்தனர். அப்போது அமெரிக்கா தலையிட்டு அவரை விடுவித்தது.

* வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்பட்ட ஏவுகணைகள் அடங்கிய கப்பலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி சீனாவை அமெரிக்கா வற்புறுத்தியது. அந்த ஏவுகணைகள் மூலம் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என அமெரிக்கா நம்பியது.

* ஏமன் அதிபர், அமெரிக்காவின் ஆசியப் படைகளுக்கான தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரசிடம், ஏமனில் உள்ள அல் - குவைதா பயங்கரவாதிகளைஅழிப்பது குறித்துப் பேசிவிட்டு,"வெடிகுண்டுகள் எங்களுடையவை, அமெரிக்காவினது அல்ல என்று தொடர்ந்து நாங்கள் கூறுவோம்' என்கிறார்.

சர்ச்சை ஜூலியன்: ஊபல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் இணையதளம்தான் "விக்கிலீக்ஸ்'. ஊஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும், இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவருமான ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர். ஊஆப்கானிஸ்தானில் அமெரிக்க அட்டூழியம் குறித்த 90 ஆயிரம் ஆவணங்கள், ஈராக்கில் அமெரிக்க அட்டூழியம் குறித்த நான்கு லட்சம் ஆவணங்கள் இதுவரை இந்த இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஊஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஊஅமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட சாரா பாலின் என்பவரின் இ-மெயிலில் இருந்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புடினுக்கு நாயின் பெயர்

* பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ என்பவரின் தவறான நடத்தை, மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பற்றிய விமர்சனமும் இந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை "ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், "வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு "பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.
 

மொபைல் தொல்லைகள்: அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்

புதுடில்லி : தொலைபேசிகளில் வேண்டாத தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு கணிசமான அபராதம் விதிக்கும் நடைமுறையை மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) இன்று முதல் செயல்படுத்துகிறது.

தொலைபேசிகளில், குறிப்பாக மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற பல்வேறு விதமான விளம்பரங்கள், தொலைபேசி வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. ஒருமுறை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, இதுபோன்ற அழைப்பு வந்ததால் கடுப்பானார். இந்த பிரச்னைக்கு முடிவுகட்டும்படி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரை அவர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் எதாவது ஒரு முறையில் இது போன்ற அழைப்புகளும், குருந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன.

"அழைக்காதீர்' பட்டியலில் தங்கள் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், என கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த "டிராய்' முடிவு செய்துள்ளது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங் கள் "700' என்ற இலக்கத்தில் துவங்கும் தொலைபேசி எண்ணில் தங்கள் விளம்பரத்தை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெலிமார்க்கெட் நிறுவனங்கள் தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளரின் எதிர்ப்பை மீறி விரும்பத்தகாத அழைப்புகளை அனுப்பும் தொலைபேசி நிறுவனத்துக்கு முதல்முறை ஒரு லட்ச ரூபாயும், நான்காவது முறை இந்த தவறை செய்யும் போது 10 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் "டிராய்' முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையை இன்று முதல் டிராய் அமல்படுத்துகிறது. மொபைல் போன் நிறுவனங்களின் தேவையில்லாத அழைப்புக்காக வாடிக்கையாளர் சேவையை அணுகினால் "ஆங்கில பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; மாநில மொழி பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; அதன் பிறகு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என காத்திருக்க வைப்பது வாடிக்கை. அப்போது அதற்காகும் கட்டணம் நுகர்வோர் தலையில் விழும். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருவது என்றாலும், இதற்கான நடைமுறைகளும் "டிராய்' மூலம் தெளிவாக்கப்பட்டால் தான் "பெஸ்கி கால்' என்றழைக்கப்படும் அர்த்தமற்ற அழைப்புகள் தொந்தரவு நிஜமாகவே தீரும். டிராயின் தற்போதைய நடவடிக்கைகள் இதற்கு தீர்வு ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தேசிய போட்டிக்குச் செல்ல பணமில்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி

 
தூத்துக்குடி :  அடுத்தாண்டு மகாராஷ்டிராவில் நடக்கும் தேசிய ஆணழகன் போட்டிக்கு செல்ல பணமில்லாமல், தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தவித்து வருகிறார். அதற்கான உதவி வேண்டி நேற்று அவர், கலெக்டரிடம் மனு கொடுத்தார். தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த விவசாயி பலவேசம் மகன் சுடலை(26). கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இவர், பிளஸ் 2 வரை படித்துள்ளார். ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறுவயதில் இவருக்கு ஏற்பட்டது. இதனால், தினமும் பளு தூக்குதலில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார்.

இதன்பயனாக, 2009 ஜன.,4 ல் நெல்லையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட பளுதூக்கும் ஆணழகன் போட்டியிலும், இந்தாண்டு ஜன., 5 ல், கோவையில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் சுடலை, முதல்பரிசு பெற்றுள்ளார். இந்தாண்டு மே 9 ல் அசாம், கவுகாத்தியில் நடந்த தேசிய போட்டியில், இந்திய அளவில் மூன்றாம் இடம்பிடித்தார். இந்நிலையில், அடுத்தாண்டு பிப்.,6 ல் மகாராஷ்டிராவில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணழகன் போட்டி நடக்கிறது. இதில், கலந்துகொள்ளும்படி போட்டி நடத்தும் அமைப்பு, சுடலைக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. ஆனால், குடும்ப வறுமை காரணமாக, அப்போட்டிக்கு அவரால் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்த சுடலை, தனது நிலையை விளக்கியும், தேசிய போட்டிக்குச் செல்ல உதவி செய்யுமாறும், கலெக்டர் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தார்.

 சுடலை கூறியதாவது: குடும்ப வறுமையை நினைத்து தேசிய போட்டிக்கு செல்லவேண்டாமென நினைத்திருந்தேன். அதனால், பயிற்சிக்கு கூட செல்லாமல் மனம் நொந்து வீட்டில் முடங்கினேன். என் குடும்பத்தினர், நண்பர்கள், சமூக அமைப்பினர் என்னை ஊக்கப்படுத்தினர். அதனால் தான், போட்டியில் கலந்து கொள்ள பணஉதவி வேண்டி, கலெக்டரிடம் மனு கொடுத்தேன்.  ஆணழகன் போட்டிக்கு தயாராக, தேவையான உணவு சாப்பிட தினமும் குறைந்த பட்சம் 500 ரூபாய் செலவாகும். ஆனால், அந்த வசதி எனக்கில்லை. மேலும், போட்டிக்குச் சென்றுவர 50,000 ரூபாய் செலவாகும். எனவே, தொண்டுள்ளம் கொண்ட தனிநபர்களோ அல்லது நிறுவனமோ எனக்கு உதவினால், தேசிய போட்டியில் நிச்சயம் சாதித்து, தமிழகத்திற்கு புகழ் பெற்றுத்தருவேன்.
இவ்வாறு சுடலை கூறினார்.  இவருக்கு உதவ விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் எண்:94892 37992

காமன்வெல்த் ஊழல் : முக்கிய புள்ளிகள் வீட்டில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு ; அடுத்து கல்மாடி ?

புதுடில்லி: இந்தியாவை உலக அளவில் ஊழல் நடத்திய விவகாரத்தில் வெளிச்சம் போட்டு ஒரு பெரும் அவப்பெயரை பெற்று தந்தது காமன்வெல்த் விளையாட்டு முறைகேடு விவகாரம். இந்த விவகாரத்தில் ஒருங்கிணப்பு குழு தலைவராக இருந்த கல்மாடியிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லையே என்ற கேள்வி தற்போது நிலவினாலும், சி.பி.ஐ., வரிசையாக தனது பணியைதொடர்ந்து செய்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக இன்று முக்கியப்பபுள்ளிகள் 2 பேர் வீடு உள்பட 11 இடங்களில் சி.பி.ஐ.,ரெய்டு நடத்தப்பட்டது.
காமன்வெல்த் போட்டிகளில் 107 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது குற்றச்சாட்டு, இதன்படி டெண்டர் கோரப்படுதல், ஒளிபரப்பு உரிமம் வழங்குதல், புதிய கூரைகள் அமைத்தல், புது, புது ஸ்டேடியம் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்திருக்கிறது.

இது தொடர்பாக எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையின்பேரில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு டைரக்டர் ஜெனரல் வி.கே., வர்மா, பொதுசெயலர் பனோட் ஆகிய இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று ( செவ்வாய்க்கிழமை) சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி நடத்தினர். இந்த இருவர் மீதும் மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பல பல்வேறு பரிவுகளில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.இந்த இரு அதிகாரிகளும் கல்மாடியின் நெருக்கமானவர்கள் ஆவர். அடுத்து கல்மாடியிடம் விசாரிக்க வேண்டியது தான் பாக்கி இருக்கிறது.

Monday, November 29, 2010

டேப்ளட் பிசி பயன்பாடு அதிகரிக்கும்

அமெரிக்காவில் இயங்கும் டிஜிடைம்ஸ் ரிசர்ச் நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட டிஜிட்டல் சாதனப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆண்டு முதல் டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று காட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில், 10 கோடி டேப்ளட் பிசிக்கள், மக்களுக்குத் தேவைப்படும் என அறிவித்துள்ளது.  எதிர்காலம், மொபைல் இன்டர்நெட் இணைப்பில்தான் இயங்கும் என்று தெரிவித்துள்ள இந்த நிறுவனம், இதனால், ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளது.  2013ல் 80 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படும். இது இந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதலாகும். இதனால்,  டேப்ளட் பிசிக்கள் பால்  மக்கள் கவனம் திரும்பும்.  இருந்தாலும், ஸ்மார்ட் போன் அளவிற்கு டேப்ளட் பிசியின் பயன்பாடு அமைய சில காலம் ஆகும். 2013 வரை இதன் பயன்பாடு 12% முதல் 13% வரையில் மட்டுமே இருக்கும். அதன் பின்னரே, மிக அதிகமாக இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.  இன்று வரை ஆப்பிள் நிறுவனத்தின் டேப்ளட் பிசியான, ஐ-பேட் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது. 42 லட்சம் ஐ-பேட் சாதனங்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.  இது ஆப்பிள் மட்டுமே, இந்தப் பிரிவில் சில காலம் இயங்கியதால் ஏற்பட்ட விற்பனை. தற்போது சாம்சங், எச்.பி. உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி தயாரிப்பில் இறங்கி யுள்ளன. இந்த வகையில் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின், பிளேபுக் டேப்ளட் பிசி, இச்சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
 

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம்

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில்,கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும். 
1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:   இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும்.  இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல்  திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும்.  இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
முதலில் கிரிட் கோடுகளை நாம் காணும் வகையில் கொண்டு வரலாம்.  Show/Hide Grid  தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட்  (Standard)  டூல் பாரில் உள்ளது.  அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9)    பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்-ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் Alt பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.
2.கைட் லைன்களின் (Guidelines)  பயன்:  படம் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை, படுக்கை வாக்கில் அல்லது நெட்டு வாக்கில் அமைக்க விரும்பினால், திரையில் கோடுகளை உருவாக்க வேண்டும்.  இதற்கு Alt + F9  கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9  அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும்.  இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். தரப்படும் ஒரு கோடு நீங்கள் செயல்படப்  போதவில்லை எனில், கண்ட்ரோல் (Ctrl)  அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே   விட்டுவிடவும். 
நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம்.  மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது.  இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன.  நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும்  என்றால்  இழுக்கும்போது ஷிப்ட்  (Shift)  கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக  ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.
3.கிரிட் கட்டம் மற்றும் வழிகாட்டும் கோடுகள் அமைக்கும் வழி: Ctrl + G  கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides  திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும் கிடைக்காத படியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் Alt R  அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.
4.விருப்பப்படி மிகவும் சரியாக:  ஆப்ஜெக்ட் ஒன்றை மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு  அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ  அதற்கான  அம்புக்குறி கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ  (Ctrl)   அழுத்தி சம்பந்தப்பட்ட அம்புக்குறி கீயினை அழுத்தவும்.
5.இருபக்கமும் வேகமாக ஆப்ஜெக்ட் நகர்த்த:   ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட்(Shift)  கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மறுபக்கத்திலும் செய்ய முடியாது.
6.நகல் பெற: ஆப்ஜெக்ட் ஒன்றை நகர்த்துகிறீர்கள். அதனை இருந்த இடத்தில் வைத்துக் கொண்டே, இன்னொரு ஆப்ஜெக்ட் வேண்டும் எனில், அதன் நகல் ஒன்று உங்களுக்கு உதவலாம் அல்லவா! அப்படியானால் Ctrl  கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Shift  மற்றும்  Ctrl   கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

உங்களுக்குத் தெரியுமா ? விலைக்கு வாங்கும் சாப்ட்வேரே எங்கள் விருப்பம்

 
 
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் 20 நாடுகளில் 38,000  ஆண் மற்றும் பெண்களிடையே எடுத்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. போலியான, நகலெடுத்த சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துக்களை  மக்களில் பெரும்பகுதியினர் அறிந்து வைத்துள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.   தகவல் களவு போதல் மற்றும்  பெர்சனல் தகவல்கள் மற்றவர்களுக்குச் செல்லுதல் ஆகிய விளைவுகள் இதனால் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவது குறித்து அதிகம் கவலை கொண்டு ள்ளனர் என்றும் தெரிவித் துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏறத்தாழ 6,000 இந்தியர்கள், மைக்ரோ சாப்ட் நிறுவனத்திடம், தாங்கள் நகல் எடுக்கப் பட்ட சாப்ட்வேர் தொகுப்பு களைப் பெற்று ஏமாந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் அறிவித்துள்ளனர்.  இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனமும், அரசும் இத்தகைய சாப்ட்வேர் தொகுப்புகளை விற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியர்களில் 75% பேர், கட்டணம் செலுத்திப் பெறும் நல்ல சாப்ட்வேர் தொகுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இவை மட்டுமே பாதுகாப்பான கம்ப்யூட்டர் அனுபவத்தினைத் தரும் என்று உறுதியாக இவர்கள் நம்புகின்றனர். விலை 14% அதிகமாக இருந்தாலும், நிறுவனங்கள் தருகின்ற முறையான சாப்ட்வேர் தொகுப்பினையே வாங்கிட 86% இந்தியர் விரும்புகின்றனர். 36% பேர், போலி நகல் சாப்ட்வேர் தொகுப்பினால், இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, பயன்படுத்துபவருக்கும் கேடு எனக் கூறி உள்ளனர். 87% பேர் தாங்கள் வாங்கிய சாப்ட்வேர் தொகுப்புகள், உண்மை யானவையா என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நாடி இருக்கின்றனர். தாங்கள் வாங்கிய சாப்ட்வேர் தொகுப்புடன் தரப்பட்ட ப்ராடக்ட் கீயினையே இவர்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். தங்களிடம் பதிந்து கொண்ட நிறுவனங்கள் மூலமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தொடர்ந்து மக்களிடையே உண்மையான சாப்ட்வேர் தொகுப்பு வாங்கிப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தும் எனவும் மைக்ரோசாப்ட் அலுவலர் வர்கீஸ் தெரிவித்தார்.

 
 

எத்தனை முறை இந்த தளம் சென்றாய் ?

ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.  வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்துவிட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, வெப் ஹிஸ்டரியை, அழித்த பின் நீங்கள் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட இணைய தளம் சென்றீர்கள் என்று தான் பார்க்க முடியும்.
இதற்கு, முதலில் குறிப்பிட்ட இணைய தளத்தினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கவும்.  Tools>Page Info  என்பதில் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் Security ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Privacy & History  என்பதின் கீழ்  see “Have I visited this website before today?”  என்று இருப்பதனைக் காணலாம். இங்கு காட்டப்படும் எண், நீங்கள் எத்தனை முறை இந்த தளத்திற்கு, இறுதியாக வெப்சைட் ஹிஸ்டரி கிளியர் செய்த பின்னர் சென்றீர்கள் என்பதனைக் காட்டும்.

இணையத்தில் சின்னத்திரை சீரியல்கள்

மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட நிகழ்வுகளாக, சின்னத்திரையில் காட்டப்படும் சீரியல் நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை, இந்த தொடர் திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது பலரின் வழக்கமாகிவிட்டது. தொலைபேசியில் ஒருவரைத் தொடர்பு கொள்ள எண்ணுபவர்கள் கூட, அவர் இந்நேரம் இந்த சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார். டிஸ்டர்ப் செய்திட வேண்டாம் என்று பார்ப்பது கூட ஒரு பண்பாட்டுச் செயலாக மாறி வருகிறது. வேலைப் பளு காரணமாக, அல்லது திருமணம், வரவேற்பு, விருந்தினர் வருகை காரணமாக சீரியல் பார்க்க இயலவில்லை எனில், பலருக்கு அது இரத்த அழுத்தத்தினை உண்டு பண்ணும் அளவிற்கு மக்கள்  இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு ஒன்றிவிட்டனர்.  இவர்களுக்கு உதவுவதற்காகவே, இணையத்தில் ஒரு தளம் இயங்குகிறது. தமிழ்ச் சேனல்களில், பிரபலமான சேனல்களில் காட்டப்படும் சீரியல்களைப் பதிந்து வைத்திடும் தளம் ஒன்று உள்ளது. இதன் முகவரி www.tamilstuffs.com.  நீங்கள் பார்க்கத் தவறிய சீரியல் காட்டும் சேனலை, இந்த தளம் சென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், குறிப்பிட்ட தேதியைக் கிளிக் செய்திடுங்கள். அன்று அந்த சேனலில் காட்டப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பட்டியலுக்குச் செல்லுங்கள். நீங்கள் பார்க்க விரும்பிய சீரியல் மற்றும் நிகழ்ச்சி மீது கிளிக் செய்தால், உடனே இயங்கத் தொடங்கி சீரியல் அல்லது அந்த நிகழ்ச்சி முழுவதும் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு என்றால், தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அநியாயத்திற்கு விளம்பரங்கள் வந்து நம் பொறுமையைச் சோதிக்கும். இதில் விளம்பரங்கள்  கட் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தளம் அப்டேட் செய்யப்படுவதாகத் தகவலும் இங்கு தரப்படுகிறது. பரவாயில்லையே! என்று ஆச்சரியப்படுகிறீர்களா!! பார்த்து மகிழுங்கள்.

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்

 
கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும்   பிரச்னைகளையும்  வாசகர்கள்  எதிர்கொள்கின்றனர்.  பல கடிதங்கள் இவை குறித்து நம் அலுவலகத்திற்கு வருகின்றன. அவற்றில் சில பிரச்னைகளுக்கு இங்கு தீர்வுகளைக் காணலாம்.
கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில் USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு  1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன.   பழைய வகை   சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப் பட்டிருந்தன. மவுஸ் மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பெரும்பாலும் பயன்பட்டு வந்தன. பின்னர் இவற்றின் பயன்பாடு அதிகமாகவும், வேகத் தேவை கூடுதலாகவும் ஆன போது,   USB  2.0 வெளிவந்தது. இது ஒரு நொடியில் 480 எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. பழைய கம்ப்யூட்டர்  வைத்திருக்கும் பல வாசகர்கள்,  இந்த இரண்டில் எது தங்களிடம் உள்ளது என்று தெரிந்து கொள்வது எப்படி எனக் கேட்டுள்ளனர்.
Start –> My Computer  சென்று  Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware  Device Manager ல் கிளிக் செய்யவும்.  கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில்   Universal Serial Bus controllers   என்பதனை அடுத்து   கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.  உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1   இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller  என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும்.
உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 2.0 இருந்தால் அங்கு Enhanced Host Controller or USB 2.0 Controller  என்று காட்டப்படும்.  நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில் வழக்கமான சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி.  லோகோ இருக்கும்.  நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்  இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும்.
இன்னொரு வகை பிரச்னையையும் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவினை, அதன் போர்ட்டில் செருகினால், அதனைக் கம்ப்யூட்டர் உணர்ந்து காட்டுவதே இல்லை எனக் கூறி உள்ளனர். 
பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் சிஸ்டம் புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும். அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை இயக்கவா? வீடியோ பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும்.  ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைச் சரி செய்திட, கீழ்க்குறித்தபடி செயல்பட வேண்டும்.   Start/Control Panel  சென்று அங்கு Administrative Tools.  என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools  பெற முடியும். அதில் Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management  என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம்  a removable drive  என்றபடி ஒரு டிரைவ் காணப்படும். இது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து  கொண்டதாக இருக்கலாம்.  இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths  என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change   என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப் படாததாக இருக்க வேண்டும். இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும்.  இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் பிரிவை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.
யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும். அதுவும் விண்டோஸ் 2000 இயக்கத் தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப் பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும்.
இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன. டேபில் கிளிக் செய்து பின்

அழ வைக்கும் அச்சுப் பொறிகள்

 
 
கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழவைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து,  அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன. இவற்றிற்கு என்ன காரணம்? என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம். நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.
1. பேப்பர் ஜாம்: இந்த ஜாம் இனிக்காத ஜாம். பேப்பரை நாம் அச்சுப் பொறிக்குள் செலுத்திய பின்னர், அச்சடித்து வெளியே வராமல், சிக்கிக் கொண்டு அப்படியே பிரிண்டரையும் நிறுத்திவிடும். சில வேளைகளில் கசங்கிய அச்சடிக்கப்பட்ட, மை உலராத காகிதம் வெளியே வரும். பல வேளைகளில் பாதி வெளி வந்த நிலையில் நின்றுவிடும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
பிரிண்டரை நிறுத்துங்கள்: முதல் வேலையாக, பிரிண்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்துங்கள். உள்ளாக இருக்கும் சிக்கிய பேப்பரை எடுக்க வேண்டியுள்ளதால், மின்சாரம் உயிரோட்டத்துடன் இருக்கும். எந்த பகுதியிலாவது கைகளைக் கொண்டு சென்று, ஷாக் அல்லது சூடு பெறுவதைத் தடுக்க இது அவசியம். லேசர் பிரிண்டர் எனில், மின்சாரத்தை நிறுத்திய பின்னரும்,  சூடு குறையும் வரை, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
கதவுகளைத் திறக்கவும்: பேப்பர் செல்லும் வழி மற்றும் வெளியே வரும் வழிகளில் உள்ள அனைத்து கதவுகளையும் திறக்கவும். எவை என்று தெரியவில்லை எனில், அந்த பகுதியில் உள்ள ட்ரேயில் இருந்து தொடங்கி, ஒவ்வொன்றாக நீக்கவும்.  குறிப்பாக, எளிதில் எடுக்கும் வகையிலேயே பேனல்கள் செருகப்பட்டிருக்கும். எந்த ஸ்க்ரூவினையும் கழட்டாமல் இவற்றை நீக்கலாம்.
கவனமாகத் தாள் மற்றும் துகள்களை நீக்கவும்: சிக்கியிருக்கும் தாள் இப்போது தெரிய ஆரம்பிக்கும். மெதுவாக அதனை இழுத்துப் பார்க்கவும். வர மறுத்தால், ஓரங்களில் உள்ள சிறிய உருளைகளை, விரலால் ஏதேனும் ஒரு திசையில் உருட்டினால், தாள் வெளியேறும். முழுத்தாளையும் எடுப்பது அவசியம். ஏற்கனவே அவை கிழிந்து தாள்களின் துகள்கள் இருப்பின், அவற்றை, அவை எவ்வளவு சிறியதாக இருப்பினும் நீக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவை உள்ளே விடப்பட்டால், மேலும் பேப்பர் ஜாம் ஏற்பட வழி வகுக்கும். இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, ஒரே மாதிரியான பேப்பர்களையே பயன்படுத்தவும். இரு வேறு தன்மையுள்ள பேப்பர்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இந்த பிரச்னையை எளிதாக வரவழைக்கும். ட்ரேயில் சரியாக பேப்பரை வைத்து, அவை ஒவ்வொன்றாகச் செல்வதற்கான வகையில் அமைப்பதும், பிரச்னையைக் கொண்டு வராது.
2. பிரிண்ட் க்யூவில் தடை: எவ்வளவு அதி நவீன பிரிண்டராக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு அச்சு வேலையை மட்டுமே, ஒரு பிரிண்டர் மேற்கொள்ளும். பிரிண்டருக்கு அடுத்தடுத்து பைல்களை அச்சடிக்க அனுப்பினால், அவை க்யூவில் வைக்கப்படும். எனவே ஒரு பைல் அச்சடிப்பில், பிரிண்டரில் கோளாறு ஏற்பட்டால், அனைத்தும் அப்படியே நின்றுவிடும். இது போன்ற தடை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், பிரிண்ட் க்யூ பார்க்க வேண்டும். எந்த டாகுமெண்ட் அச்சில் பிரச்னை என்று பார்த்து, அதனை நீக்க வேண்டும்.
3.சிந்திய டோனர் அல்லது மை: சில வேளைகளில் உங்களின் பிரிண்டரில் உள்ள டோனர் கேட்ரிட்ஜ்   அல்லது மை குப்பியில் இருந்து மை அல்லது டோனர் வெளியேறி, பிரிண்டருக்குள் சிதறியிருக் கலாம். இவை பெரும்பாலும் அச்சுக்கென அனுப்பப்பட்ட தாளிலேயே இருக்கலாம். இவற்றை நீக்குவதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும். சிதறிய மை, டோனரை உலர வைத்து நீக்கவும். சூடான அல்லது குளிர்ந்த நீரைச் சுத்தம் செய்திடப் பயன்படுத்தக் கூடாது. பொதுவான நீர்   பயன்படுத்தவும். ஏதேனும் சுத்தப்படுத்தும் சொல்யூ சனைப் பயன்படுத்துவதாக இருந்தால், எச்சரிக்கை யுடன், சிறிய இடத்தில் பயன்படுத்திப் பார்த்து, கெடுதல் விளைவுகள் இல்லை எனில் பயன்படுத்தலாம். வேக்குவம் கிளீனரைப் பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து அழுத்தத்தில் வெளியேறும் காற்று, டோனரை, மையை இழுத்து வெளியே விடும் வாய்ப்பு உண்டு. எந்தக் காரணம் கொண்டும் டோனரை முகர்ந்து பார்க்கக் கூடாது. கைகளில் பட்டிருந்தால், கிருமி நீக்கும் சோப் கொண்டு சுத்தமாகக் கழுவுவது மிக மிக அவசியம். முறையான டோனர்களைப் பயன்படுத்தினால், சிதறும் நிலை உருவாகாது. விலை குறைவாக உள்ளது என்பதனால், ரீபில் டோனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்தும் முடிந்த பின்னர், சோதனை பைல் ஒன்றை உருவாக்கி, அச்சடித்துப் பார்த்த பின்னர், ஆவணங்களை அச்சடிக்கவும்.
4.மின்சாரம் நின்று போனால்: சில வேளைகளில், அச்செடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில், இடையே மின்சாரம் வருவது தடைப்படும். இந்த வேளையில் அச்சு வேலை நடந்து கொண்டிருந்தால், பேப்பர் சிக்கி இருக்கும். தாளை எளிதில் எடுக்க முடிந்தால் எடுக்கலாம். அல்லது மின்சாரம் வரும்வரை காத்திருந்து மீண்டும் இயக்கவும். சிக்கிய நிலையில் உள்ள தாள் தானே வரும் வாய்ப்புகள் அதிகம்.

மிக உயரமான "பிரின்சஸ் டவர்ஸ்' துபாயில் உருவாகிறது

துபாய்:உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டடம் 2011ல் திறக்கப்படும் என, அதை கட்டி வரும் "ப்ரமோட்டர்' டாமீர் என்பவர் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் "கோல்ட் கோஸ்ட்' கடற்கரையில் உள்ள "க்யு 1' என்ற 323 மீ., உயரமும், 78 தளங்களும் கொண்ட கட்டடம் தான் இப்போது உலகின் மிக உயர்ந்த குடியிருப்பு கட்டடமாக உள்ளது. அதையும் விஞ்சும் வகையில், துபாயின் "மரினா' பகுதியில், 414 மீ., உயரத்தில் 107 தளங்களில் 763 குடியிருப்புகள் கொண்ட "பிரின்சஸ் டவர்' என்ற பெயர் உள்ள கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இந்த கட்டடம் 2011ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்களை உருவாக்கும் போது ஊழல் அதிகரிப்பதை தடுக்க முடியாதா?



 


"மோசமான நிர்வாகம் கொண்ட அரசு என்றால் ஊழல் அதிகரிக்கும்' என்று சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் எம். ஆர். வெங்கடேஷ் கூறுவது மேம்போக்காக பார்த்தால் வெறுப்பு பேச்சு என்று தோன்றும். ஆனால், அவர் படைத்திருக்கும் "சென்ஸ், சென்செக்ஸ் அண்ட் சென்டிமென்ட்ஸ்' என்ற ஆங்கில நூல் பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.

வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்து பெரிய கம்பெனிகளுக்கு ஆலோசனை தரும் வெங்கடேஷ் இயல்பாகவே இந்திய கலாசாரம், நற்பண்புகளில் அக்கறை காட்டுபவர். அதே சமயம் பொருளாதார தாராளமயத்தை ஆதரிக்கிறார். ஆனால், உலக அளவில் இணைக்கப்பட்ட பொருளாதார நடைமுறைகள் எத்தனை இடங்களில் கறுப்புப் பணத்தை ஒளித்து வைக்க வசதியாகிவிட்டது என்பதை அலசுகிறார். அதை மீட்க தேவைப்படும் சட்டதிட்டங்கள் , நடைமுறைகள் பற்றியும் இந்த நூலில் அலசுகிறார்.

பொதுவாக பாதுகாப்பான சேமிப்பு என்ற அணுகுமுறையைக் கலாசாரமாகக் கொண்ட இந்தியா தற்போது இந்தச் சூழலில் மாட்டிக் கொண்டிருப்பதை அவர் தன் நூலில் விளக்கிய விதம் பற்றி கூறியதாவது: நம்நாட்டிற்கு அன்னிய மூலதன முதலீடு வரும் அளவு இன்னமும் அதிகரிக்கவில்லை என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது பணம் வரும் நடைமுறைகள் அபாயமானவை. மொரீஷியஸ் நாட்டின் வழியாக, துபாய் வழியாக வரும் பணம் பற்றி புதிதாக ஆய்வு செய்ய வேண்டும். நமது பணமே வேறு வழியில் வரிகட்டாமல் சென்று இங்கு திரும்பி வருகிறது. அதுவும் "பங்கேற்பு பத்திரம்' என்ற "பார்டிசிபேட்டரி நோட்' பற்றி இன்னமும் வரன்முறை ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக வரும் அன்னிய மூலதன அளவு மொத்த அளவில் 45 சதவீதம் நம்நாட்டில் இருக்கும். ஆனால், சிங்கப்பூரில் இதன் அளவு 9 சதவீத அளவு மட்டுமே. எந்த சந்தைப்படுத்தும் நடைமுறையிலும் புழங்குகிற பணம் சந்தேகத்திற்குரிய பணமாக இருக்கிறது. என் நூலில் ஜான் கிறிஸ்டன்ஸ் என்ற பொருளாதார நிபுணர் முன்னுரை எழுதியிருக்கிறார்.

அதில் அவர், "இந்தியாவில் இருந்து 2500 கோடி டாலர் வரை இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பணம் ஒவ்வொரு ஆண்டும் வெளியே போகிறது' என்பதை பதிவு செய்கிறார். கணக்கில் காட்டமல் பெரியஅளவு தொகை சந்தையில் நுழையும் போது அது "காசினோ'என்ற சூதாட்ட நடைமுறை போலஆகிவிடும். சத்யம், குளோபல் டிரஸ்ட் வங்கி, அவர்களுக்கு உதவிய பிரைஸ்வாட்டர்ஸ் கூப்பர்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகள் இதற்கு சாட்சி. இப்படியே போனால் "போர்ப்ஸ்' பத்திரிகையில் வெளியாகும் கோடீஸ்வரர்கள் பட்டியல் இனி அதிகரிக்கும். அதனால் பாமர மனிதனுக்கு, மத்திய தர மக்களுக்கு பயன்இல்லை. லஞ்சப் பணம் வெளிநாடுகளில் உள்ள சில இடங்களில்சேமிக்கப்படுகிறது. இது லட்சக்கணக்கான கோடிகள் என்பது பரவலாகப் பேசப்படுகிறது.

எனக்கு வந்த இ-மெயிலில் ஒரு தகவல். அதில் , பிரிட்டனில் உள்ள தீவான ஜெர்சியில் பாங்க் ஆப் இந்தியா' கிளை இருக்கிறது. பணப்பரிவர்த்தனை நடப்பதற்காக இங்கே கிளை அமைந்திருக்கிறது. அப்படி என்ன ஜெர்சி தீவில் வர்த்தகப் பரிமாற்றம் நடக்கும். இதை என்னிடம் தெரிவித்த ஜான் கிறிஸ்டன்சன், " முறைகேடாக பணம் சேமிப்பதை தடுக்காவிட்டால் ஊழல் அதிகரிக்கும்' என்கிறார். இவ்விஷயங்களை தெளிவுபடுத்த ஆய்வுக் கருத்துக்களுடன் இந்த நூல் வெளியிடப்படுகிறது. ஆனால் , மக்களுக்கு விழிப்புணர்ச்சி, நல்ல நிர்வாகம் தரும் அரசு தான் இதற்குசரியான தீர்வு.இவ்வாறு ஆடிட்டர் வெங்கடேஷ் கூறினார்.

கட்சி பாகுபாடு இன்றி கமிஷனில் பங்கு போட்ட நெல்லை மாநகராட்சி

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் 25 கோடி ரூபாய் செலவிலான திட்டப்பணி டெண்டரில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க அனைத்து தரப்பு கட்சியினரும் பங்கு போட்டு கொள்ளும் சமரசம் பேசப்பட்டதால் இன்றை மாநகராட்சி கூட்டம் பெரும் கூச்சல் குழப்பம் இல்லாமல் முடிந்தது. முறைகேடுகள் குறித்து அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசாமல் மவுனம் சாதித்தனர்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிஅமைப்புகளில் சிமெண்ட் ரோடுகள், வாறுகால்கள் அமைக்க அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ 25 கோடியில் பணிகள் நடக்க உள்ளது. இதற்கான டெண்டர் நவம்பர் முதல் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தினர் குறிப்பிட்ட 5 காண்ட்ராக்டர்களுக்கு மட்டுமே பணியை பிரித்துதருவதெனவும் அவர்களில் இருந்து 15 சதவீதம்

கமிஷன் தொகையை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு பிரித்துக்கொள்வதெனவும் முடிவெடுத்தனர். ஆனால் இதற்கு ஆளுங்கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. நெல்லையை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் தமது பினாமி ஒருவரை அனுப்பி டெண்டர் போடச்செய்தார். ஆனால் மாநகராட்சியில் அரிவாள், கத்தியுடன் காத்திருந்த கும்பல் அந்த நபரை டெண்டர் போடவிடாமல் தடுத்து அனுப்பியது. எனவே தி.மு.க., பிரமுகர் கமிஷனர் சுப்பையன், சென்னையில் உயர்அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். எனவே கமிஷனர் சுப்பையன், டெண்டர் தேதியை நவம்பர் 4ம் தேதி வரை தள்ளிவைத்தார்.
மேலும் ஆன்லைனிலும் டெண்டர் கோரலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலம் 13 பேர் டெண்டர் கோரினர்.ஆனால் அவர்களும் டெண்டருக்கான காப்புத்தொகையை நெல்லை மாநகராட்சி பெட்டியில்தான் போடவேண்டும். ஆனால் அவர்களையும் காப்புத்தொகையை போடவிடாமல் தடுத்ததால் தற்போது ஏற்கனவே கேட்ட தரப்பிற்கே டெண்டர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அனைவருக்கும் தரவேண்டியுள்ளது: இந்நிலையில் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று நடந்தது. அ.தி.மு.க.,.உள்ளிட்ட கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் அறைக்கு வந்தனர். ஆனால் கூட்ட அரங்கிற்குவராமல் புறக்கணித்தனர்.அ.தி.மு.க.,கவுன்சிலர்களை தி.மு.க.,மேயர் சுப்பிரமணியன் தமதுஅறையில் அழைத்து பேசினார்.25 கோடி ரூபாய் திட்டப்பணியில் 2.5 கோடி ரூபாய் கமிஷன் கிடைக்க வாய்ப்புள்ளது.எனவே ஒரு கவுன்சிலருக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் எந்த கட்சி வித்தியாசமும் பாராமல் 55 வார்டு கவுன்சிலர்களுக்கும் கமிஷன் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு டெண்டர் போடாமல் வாபஸ் வாங்கிக்கொண்டவர்கள், மண்டல தலைவர்கள், மேயர், துணைமேயர் என அனைவருக்கும் தரவேண்டியுள்ளது. எனவே 2 லட்சம் ரூபாய் என கட்டாயப்படுத்தாதீர்கள். குறைந்தது ஒன்றரை லட்சமாவது தர முயற்சிப்போம். ஆனால் அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிக்க கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் 25 கோடி ரூபாய் திட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்காமல் தீர்மானம் அனைத்தும் நிறைவேறின.
வாக்கிடாக்கியால் பயன் இல்லை : இதற்கிடையே மாநகராட்சி கூட்டம் உப்பு சப்பில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக மண்டல தலைவரான விஸ்வநாதன் தமக்கு மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசுவதற்காக தரப்பட்ட வாக்கிடாக்கியால் பயன் இல்லை என கூறி அதனை மேயரிடம் ஒப்படைத்தார். மேயர் இனி அதிகாரிகள் அப்படிஇருக்க கூடாது என அறிவுரை கூறினார்.
இந்த பிரச்னை குறித்து கமிஷனர் சுப்பையன் கூறுகையில், 13 பேர் ஆன்லைனில் டெண்டர் கேட்டனர். இவர்களில் ஒருவர் என்ன காரணத்தினாலோ டெண்டர் கிடைத்தும் வேண்டாம் என மறுத்துவிட்டார். சிலர் காப்புத்தொகை செலுத்தாததால் ரத்தாகிறது.கமிஷன் பிரச்னையால் ரோடு, வாறுகால் பணிகளில் முறைகேடுகள் நடந்தாலோ, பணிகள் திருப்தியாக இல்லையென்றாலோ அவற்றை ரத்துசெய்வோம் என்றார்.

திண்டுக்கல் அருகே "ராணுவ கிராமம்': தேச பாதுகாப்பு பணியில் பஞ்சம்பட்டி

 
 
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் பஞ்சம்பட்டி உள்ளது. இக்கிராம மக்கள் தொகை 6,530ஆகும். (2001 கணக்கெடுக்கின்படி)இக்கிராமத்தில் வீட்டிற்கு குறைந்தது ஒருவர் ராணுவத்தில் உள்ளனர். 2ம் உலக போரில் இக்கிராமத்தை சேர்ந்த 67 பேர் பங்கேற்றுள்ளனர். நாட்டிற்கு சேவை செய்வது தங்களது லட்சியங்களில் ஒன்று என்கிறார் ஊராட்சி தலைவர் கருப்பையா(இவரும் முன்னாள் ராணுவ அதிகாரி).

இவர் கூறுகையில்,"இந்த ஊரை சேர்ந்த சேவியர் என்பவர் 2ம் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்தார். அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றினார். இவர் விடுமுறைக்கு வந்தபோது கிராம மக்களிடம் நாட்டுபற்று பற்றி கூறுவார். சிலரை ராணுவத்தில் சேர்க்க அழைத்தும் செல்வார். சுமார் நூறு பேர் இவரால் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் ராணுவவீரர்கள் விடுமுறைக்கு வரும் போது அவர்களை பார்த்து பிற இளைஞர்களும் ராணுவத்தில் சேர்ந்தனர். தற்போது இக்கிராமத்தில் 300 பேர் முன்னாள் ராணுவ வீரராகவும், 300க்கும் அதிகமானோர் ராணுவத்திலும் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர் சங்கம் எங்கள் கிராமத்தில் உள்ளது. அவர்களது ஆலோசனைபடி நான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஒளிவுமறைவற்ற நிர்வாகம் இக்கிராமத்தில் நடக்கிறது. நாட்டிற்கு சேவை செய்தது போல் கிராம வளர்ச்சிக்கும் பாடுபடுகிறேன்,'என்றார்.

கணவனுக்கு பின் கைகொடுத்த நம்பிக்கை: பஞ்சர் ஒட்டி மகன்களை படிக்க வைக்கும் தாய்

மேட்டூர்: மேட்டூரை சேர்ந்த பிரேமா என்ற பெண் கணவன் இறந்து விட்டாலும் பஞ்சர் ஒட்டும் வேலை செய்து, மகனை இன்ஜினியரிங் படிக்க வைப்பதோடு, வாழ்க்கை பயணத்தையும் தொடர்கிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடலை சேர்ந்த செந்தில்குமார்- பிரேமா (38) தம்பதியருக்கு பிரேம்குமார் (19), ப்ரவீன்குமார் என இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் மேட்டூர் ஆர்.எஸ்.பகுதியில் டயர் பஞ்சர் ஒட்டுவது, வாட்டர் சர்வீஸ் செய்வது போன்ற தொழில் செய்தார். மனைவி பிரேமாவும் கணவனுக்கு உதவியாக லாரி டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, வாட்டர் சர்வீஸ் செய்வது போன்ற பணிகளை செய்தார். அதில், கிடைக்கும் வருமானம் மூலம் மகன்களை படிக்க வைத்தனர்.மூத்த மகன் பிரேம்குமார் இன்ஜினியரிங் படிக்கிறார். இளைய மகன் ப்ரவின்குமார் ஆறாம் வகுப்பு படிக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன், செந்தில்குமார் இறந்து விட்டார். மகன்கள் படித்து கொண்டிருக்கும் நிலையில், கணவன் இறந்து விட்டதால், வாழ்க்கையை எதிர்கொள்வதில் பிரேமாவுக்கு லேசான கலக்கம் ஏற்பட்டது.
இருப்பினும் நம்பிக்கை இழக்காத பிரேமா கணவன் செய்த தொழிலை தானே தொடர முடிவு செய்தார். முன் அனுபவமும் கை கொடுத்ததால், ஆறு மாதமாக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டியும், வாட்டர் சர்வீஸ் செய்தும் கிடைக்கும் வருமானத்தில் மகன்களை படிக்க வைக்கிறார்.

பிரேமா கூறுகையில், ""பஞ்சர் ஒட்டுவதும், வாட்டர் சர்வீஸ் செய்வதும் கடினமான வேலை. கணவன் இறந்தவுடன் நானே அதை செய்தபோது, பலரும் ஏளனம் செய்தனர். மகன்களை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, உறுதியோடும், நம்பிக்கையோடும் ஆறு மாதமாக இந்த வேலைகளை செய்கிறேன். டூவீலர்களுக்கு மட்டும் பஞ்சர் ஒட்டுவேன். கார், வேன் போன்ற வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்வேன். காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதும் வேலைக்கு வந்து விடுவேன். குடும்பம் நடத்தும் அளவிற்கு வருமானம் கிடைக்கிறது. அவர்கள் படிப்பு முடிவு வரை இந்த வேலையை தொடர்வேன்,'' என்றார் நம்பிக்øயோடு. கணவன் இறந்தவுடன் வாழ்க்கை இருண்டு விட்டதாக நினைக்கும் பெண்களுக்குள் பிரேமா ஒரு தன்னம்பிக்கை சுடராக திகழ்கிறார்.

சர்வதேச தலைவர்களும் பட்டப்பெயர்களும் : விக்கிலீக்ஸ் தகவல்

வாஷிங்டன் : அமெரிக்க தூதரக வட்டாரத்தில் சர்வதேச தலைவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டதும் , பட்டப‌‌்பெயர் விபரமும் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலமாக்கியுள்ளது. அதன்படி பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஆடைகள் இல்லாத பேரரசர் என பெயரிடப்பட்டுள்ளதாம். இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பட்டப்பெயர் வலிமையற்ற, செயல்திறனற்ற ஐரோப்பிய தலைவர். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு புடினின் கையாள் என்றும் புடினுக்கு ஆல்பா டாக் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாதுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஹிட்லர். வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் -இல் மனவலிமையற்ற வயதானவர் என அழைக்கப்படுகிறார்.

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்..

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும்.

உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும், இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில் முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக் கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல் தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட் மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.

குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள், "ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது. இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும் பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்ததன் விளைவாக, நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருக்கும் அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறியதாவது:இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளங்கள் அதிகளவில் உலவுகின்றன. இதில், குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.இதை விளம்பரப் படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, நெட் பிரவுசிங் செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, உருவாக்கினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் இன்டர்நெட் பிரவுசிங்கில் இருக்கும் போது ஆபாச பட, "பாப் அப்'கள் தெரியும்படி செய்கின்றனர். இதனால், மாணவர்கள் இந்த வெப்சைட்களில் நுழைந்து பார்க்கின்றனர்; தங்கள் மனதை பாழ்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பெரியவர்களது கண்காணிப்பு உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும். இவை தனியறையில் இருந்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. தற்போது மொபைல் போன்களிலும் இன்டர்நெட் பார்க்கும் வசதியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய போனை வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பும் அளவான சுதந்திரமும் பெரும்பாலான பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். இவ்வாறு சுதாகர் கூறினார்

விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்கள்: அமெரிக்க அரசு கண்டிப்பு

யூயார்க்:அமெரிக்கா தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக "விக்கி லீக்ஸ்' இணையதளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என அறிவித்துள்ள அமெரிக்கா, சட்டவிரோதமாக பெறப்பட்ட அந்த ஆவணங்களை மீண்டும் தன்னிடம் ஒப்படைத்து விடும்படி, "விக்கி லீக்சிடம்' கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளைப் பற்றிய 30 லட்சம் ரகசிய ஆவணங்களை விரைவில் வெளியிடப் போவதாக "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் அறிவித்தார். இதையடுத்து, அவற்றை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்ட அமெரிக்கா, தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இதுகுறித்து நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை விடுத்தது.இது குறித்து, நேற்று "விக்கி லீக்ஸ்' இணையதளத்துக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:இந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டால், கணக்கில்லாத தனிநபர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும்.

அரசு அதிகாரிகள், தரகர்கள் மூலம் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாது ஆவணங்களைப் பெறுவது என்பது அமெரிக்க சட்டவிரோதம் என்பதையும், அப்படிப் பெற்றுக் கொள்பவர்கள் அதற்கான விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்."நியூயார்க் டைம்ஸ்", "தி கார்டியன்', "டெர் ஸ்பைஜெல்' பத்திரிகைகளின் பிரதிநிதிகளிடம் நாங்கள் பேசியதில் இருந்து அவர்கள் மூலம் வெளியிடுவதற்காக, தலா இரண்டரை லட்சம் ஆவணங்களை நீங்கள் வைத்திருப்பதாகத் தெரிந்துள்ளது.அதனால், அவற்றை வெளியிடுவதால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்க வேண்டும் என நினைத்தால், அவற்றை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

அனைத்து ஆவணங்களையும் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்க வேண்டும். "விக்கி லீக்சின்' அனைத்து ஆவணக் களஞ்சியங்களில் இருந்தும் அந்த ஆவணங்களை அழித்து விட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், ரகசிய ஆவணங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்காக, "விக்கி லீக்சுடன்' எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அலறுகிறது அமெரிக்கா ; இரண்டரை லட்சம் ரகசிய ஆவணங்கள் விக்கிலீக் வெளியீடு

நியூயார்க்: அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் , தோழமை நாடுகளுடனான நட்புறவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களை இந்த விக்கி லீக் இணையதளம் வெளியிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 287 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையுடன் என்ன, என்ன விவரம் தொடர்பு கொள்ளப்பட்டது. என்றும் சீனா, பிரிட்டன் ரஷ்யா , இந்தியா, ஆப்கன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தொடர்பான ஆவணங்கள் முக்கியமானது ஆகும். இந்த ஆவணஙகளில் சில விவரம் வருமாறு:

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுக்கு அல்பாடாக் என சங்கேத வார்த்தை பயன்படுத்தப்பட் விஷயங்கர் பரிமாறப்பட்டுள்ளது. ஆப்கன் துணை பிரதமர் ஒருவர் அமெரிக்க டாலருடன் சவுதியில் பிடிபட்ட போது அவரை அமெரிக்கா விடுதலை செய்ய பெரும் ஆர்வம் காட்டியது. பாகிஸ்தானில் அணு ஆயுதம் ஆபத்தை விளைவிக்கும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுத்தும் இதற்கு பாக்., செவி சாய்க்கவில்லை.

இது அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியாக கருதப்படுகிறது. சீனாவில் கூகுள் இணையதளத்தை செயல்படவிடாமல் இருக்க அமெரிக்கா உள்வேலை பார்த்திருப்பதும், தலாய்லாமா கம்ப்யூட்டர் செயல்படாமல் போக உரிய வேலை பார்த்த விவரமும் தெரிய வந்திருக்கிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த சவுதி மன்னர் ஆர்வம் காட்டியதாகவும், இதற்கு அமெரிக்கா பெரும் முயற்சியில் இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சென்ற ஆவணஙகள் மொத்தம் 3 ஆயிரத்து 38 என்றும் இது தொடர்பான விவரங்கள் வெளியிடுவதில் டெக்னிக்கல் கோளாறு காரணமாக இன்னும் வெளிவராமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ரகசியங்கள் இருப்பதால் இந்தியா விஷயங்கள் நாளை, அல்லது நாளை மறுநாள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், ஒருங்கிணைந்த கொரி<யா மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி ராஜதந்திர பயணமாக மத்திய ஆசிய நாடுகள் மற்றும் பெர்சியன் வளைகுடா பயணம் மேற்கொள்ளவிருப்பது தெரியவந்துள்ளது. கஜகஸ்தானில் நாளை மறுநாள் நடைபெறும் 56 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அமெரிக்க ஐரோப்ப பாதுகாப்பு அமைப்பு கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். கஜகஸ்தான் பயணத்தின் போது, ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
விக்கலீக்சின் இந்த ரகசிய ஆவணஙகள் வெளியீடு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. இதனை வெளியிட வேண்டாம் என பல முறை எச்சரித்தும் இந்நிறுவன ஜூலியன் அசேஞ்ச் பொருட்படுத்தவில்லை.
சர்வதேச தலைவர்களும் பட்டப்பெயர்களும் : அமெரிக்க தூதரக வட்டாரத்தில் சர்வதேச தலைவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டதும் , பட்டப‌‌்பெயர் விபரமும் விக்கிலீக்ஸ் அம்பலமாக்கியுள்ளது. அதன்படி பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஆடைகள் இல்லாத பேரரசர் என பெயரிடப்பட்டுள்ளதாம். இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பட்டப்பெயர் வலிமையற்ற, செயல்திறனற்ற ஐரோப்பிய தலைவர். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு புடினின் கையாள் என்றும் புடினுக்கு ஆல்பா டாக் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாதுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஹிட்லர். வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் -இல் மனவலிமையற்ற வயதானவர் என அழைக்கப்படுகிறார்.

MAASILAAMANI SONGS - [HQ]

Oh Divya -  [HQ]


Odi Odi Vilayadu - [HQ]


Dora Dora -  [HQ]


Nacka Romba Nacka - [HQ]


Sunday, November 28, 2010

Ayan Songs - [ HD ]

Vizhi moodi - [ HD ]


Nenje Nenje - [ HD ]


Oyaayiyae Yaa - [ HD ]


Pala Palakkira - [ HD ]


Honey Honey - [ HD ]


Related Posts Plugin for WordPress, Blogger...