WELCOME TO JUST-ONECLICK.BLOGSPOT.COM ......... A few stories around Education on the UNICEF India

Saturday, January 8, 2011

காதல் கவிதை

பார்வை  - காதல் 
கவிதை

பார்வை  

நான் பார்க்காத போதெல்லாம் -நீ
என்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
சொல்கிறது என் மனசாட்சி -ஏனென்றால்
நீ பார்க்காத போதெல்லாம்-நான்
உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ! 

உன்னை வைத்து என்ன செய்ய போகிறாய்? 

போயும், போயும் ....
என் இதயத்தை நீ கேட்க்கிறாய்....
இதயத்தில் இருப்பது நீ தானே
உன்னை வைத்துக்கொண்டு ....
என்ன செய்வாய் நீ.....? 

உயிர்    
வலிக்கின்றதே ............. - காதல் கவிதை

உயிர் வலிக்கின்றதே ............. 

உன்னை நானும்
நினைப்பதை யாரும்
தடுக்கின்ற வேளை
துடிக்கும் .
இதயம்
வேலை நிறுத்தம்
செய்கின்றதே
உயிர் வலிக்கின்றதே .....

நண்பா . . . நான் . . . 

நண்பா . . .

நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்

யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து ... தயங்கித் தயங்கி
தான் பேசுகிறாள் .. .
நான் சொன்ன ஒரு வார்த்தையால் ...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று...
என்ன செய்வதென்பது
தெரியாமல் நான் . . .

கட்டாயத் திருமணம் 

கட்டாயத் திருமணம்

லட்சங்கள் பல

கொட்டிக் கொடுத்தார்கள்
கொடுக்கவில்லை அழகான என்னவளை . . .

 

இதயம் . . . 

இமைகள் மூடித்திறந்த போதும்

இடிகள் உதயமான போதும் - என்

இதயம் தூங்கவில்லை

உறவுகள் உதயமான போதும்

உரிமையை தேடிய போது - என்

உள்ளம் ஏங்கவில்லை

அன்பே!

உன்னை நினைத்த போது - என்

உள்ளம் ஏங்கியது

நீ

என்னை ஏற்க மறுத்து

இடறித் தள்ளிய போது - என்

இதயம் தூங்கியது . . .

சொல்லாத காதல்...  -
 காதல் கவிதை

சொல்லாத காதல்...  

உலகமெல்லாம்
சொல்லி விட்டேனடி
உன்னை காதலிக்கிறேன் என்று
உன்னிடம் மட்டும் சொல்லாமல்....


உன்னாலே......  

எந்த இசையும்
பிடிக்கவில்லை,
உன் குரலை
கேட்ட பின்பு.. .

எந்த சுவையும்

பிடிக்கவில்லை
உன் இதழை
சுவைத்த பின்பு...

எந்த பெயரும்

பிடிக்கவில்லை
உன் பெயரை
கேட்ட பின்பு...

எந்த பெண்ணையும்

பிடிக்கவில்லை
உன்னை
பார்த்த பின்பு...

காதலே...

பிடிக்கவில்லை
"நீ"
ஏமாற்றிய பின்பு...? 

ஓர் தூய இதயமுள்ள பெண்ணைத்தேடி !!!! 

உன்னைக் காக்கும் ஓர் உயிரானேன் - உன் மீது கொண்ட காதலால் !!!
நீ வீசிய சொல்லம்புகள் என்னை வறுத்தியதே தவிர- என் இதயத்தையல்ல !!!
ஓர் பார்வை போதுமென்று உன் பின் அலைந்தேன் - ஒர் வாயில்லா ஜீவன் போல் !!!
என் இதயமாளிகையின் அரசியாய் உன்னை எண்ணினேன் நேற்றுவரை !!!
இன்றுடன் நான் வெறுக்கிறேன் உன்னை- என் உயி உடல் அனைத்திலுமாக !!!
ஏனெனில் நீ கொச்சைப்படித்தியது என்னையல்ல- நான் உன்மீது கொண்ட மட்டற்ற காதலை !!!
நான் இன்று வெட்கப்படுகிறேன் - ஓர் இதயமற்ற ஓர் பெண்ணை நேசித்ததற்காக !!!
மீண்டும் ஆரம்பிக்கிறேன் என் காதல் பயணத்தை- ஓர் தூய இதயமுள்ள பெண்ணைத்தேடி !!!! 

என்னவள் 

”இதய துடிப்பு,
அதிகமாக ஆகிறது...
என்னவள் என்னை பார்க்காதபோது”

முதல் காதல் கடிதம் 

”நான் படித்த முதல்,
காதல் கடிதம்,
உன் ‘கண்கள்’ தான்

அழகு 

அமாவாசையிலும்

பெ௱ர்ணமியாய் !!!!!


அவள் முகம் !!!!!!!!! 

 

கவிதை - காதல் 
கவிதை

கவிதை 

”ஒரு வரி ‘கவிதை’
நீ!,,
உன்னை ஒவ்வொரு வரியும்,
’கவிதையாய்’ எழுதுவது,
நான்!.... 

பிழை  

இறைவன் செய்த பிழை
அவள் மேல் முதலில்
எனக்கு வந்த காதல் .
உணர தவறியது
அவள் பிழை .
சொல்ல தவறியது
என் பிழை 

 

நினைவுகள் தொடரும் 

நான் இங்கு
இருக்கும் வரையல்ல
இறக்கும்வரை உன்னை நினைத்துக்கொண்டும்
நேசித்துக்கொண்டும் தான் இருப்பேன்...!
நீ என்னை மறந்தாலும் ..!
நீ என்னை வெறுத்தாலும்............!!!!!!!

பயம் 

”உலகமே அழியப்போகிறதாம்!...
பயமாகதான் இருக்கிறது,
இன்னும் அவள் என்,
காதலுக்கு, பதில் சொல்லாமல்!...
மெளமாக இருப்பதை,
நினைத்து.....

அழகாயிருக்கிறது.. 

உன்னை நினைத்து
கொண்டிருப்பதை போலவே
அழகாயிருக்கிறது..

நீயும் என்னைத்தான்

நினைதுக்கொண்டிருப்பாய்
என்று நினைத்துக்கொள்வது.. 

உண்மைக் காதல்  

வார்த்தைகள்
பரிமாறப்படாமல்
செத்தது
"உண்மைக் காதல்"

Saturday, December 4, 2010

காசு மேல காசு: வெளுத்து வாங்கும் ரோந்து போலீசு: அதிகாரிகள் வேடிக்கை

கோவை : கோவை புறநகரில் இயக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாருக்கு "பணத்தேவை' அதிகரித்துள்ளது போலும். விபத்து மற்றும் குற்றங்களை தடுப்பதில் முனைப்பு காட்டாமல், வாகன சோதனை நடத்தி டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி, கொள்ளை குற்றங்களை தடுக்கவும்; வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவோருக்கு அவசர கால உதவிகளை மேற்கொள்ளவும், "தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம்' கோவையில் இயக்கப்படுகிறது. இவ்வாகனங்கள், கோவை - சத்தியமங்கலம் சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மற்றும் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் "ஷிப்ட்' முறையில் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு ரோந்து வாகனத்திலும் தலா ஒரு எஸ்.ஐ., தலைமையில் நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் திருட்டு, வழிப்பறி குற்றங்கள் அல்லது வாகன விபத்து நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இப்போலீசாரின் பணி. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகளின் எல்லைக்குள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டிய போலீசார், முறைகேடாக பண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன சோதனை என்ற பெயரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் போலீசார், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்கள் வைத்திருக்காத நபர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக ஆடு, மாடு, கோழி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை மடக்கி 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை கறந்துவிடுகின்றனர் நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் இவ்வகையான வசூல் அதிகரித்துள்ளது.சரக்கு லாரியில் ஆடு, மாடு >உள்ளிட்ட கால்நடைகள் தினமும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச்செல்வதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை டிரைவர்கள் பின்பற்றுவதில்லை. அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை லாரிகளில் அடைத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் கொண்டு செல்கின்றனர். இவ்வாகனங்களை மடக்கி பிடிக்கும் ரோந்து போலீசார், டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.மாமூல் தர மறுக்கும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என வெளிப்படையாகவே மிரட்டவும் செய்கின்றனர்.

இதனால், பலரும் போலீசார் கேட்கும் பணத்தை கொடுத்துச் செல்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் தமிழகம் - கேரளா எல்லை அருகிலுள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதிகளில் அதிகம் நிகழ்கின்றன. மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், பேரூர் பகுதிகளிலும் வாகன சோதனை என்ற பெயரில் போலீசாரின் அடாவடி வசூல் நடக்கிறது.

தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி கூறுகையில், "வாகன சோதனை என்ற பெயரில் பண முறைகேடுகளில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

முதல்வருக்கு கிடைத்த சம்பளம் என்ன?ஜெயலலிதா புது தகவல்

சென்னை : ""கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்பது மக்கள் அறிந்த விஷயம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதை தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க., என்பதை மறந்து, "கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தனது கணக்கை காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பலமுறை பேசி இருக்கிறார். உண்மையை சொல்லப் போனால் கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி. இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது, இவருக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்பது மக்கள் அறிந்த விஷயம்.இப்படிப்பட்ட கருணாநிதி, இப்போது திடீரென கணக்கு காட்டுகிறேன் என்ற தலைப்பில், தன் குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என புதிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

1946ம் ஆண்டு ஜன., 16ம் தேதி கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்ப படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டுமனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து தன் வசம் நகை, பாத்திரம் வகையறா 1,000 ரூபாய் இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார்.கருணாநிதி தன் அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறி இருக்கிறார். மணமகள் படத்திற்கு கதை வசனம் எழுதி 10 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், இருவர் உள்ளம் படத்திற்காக 20 ஆயிரம் ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு. சி.ஐ.டி., காலனியில் ஒரு பங்களா. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா. மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாளிகைகள், பண்ணை வீடுகள். அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள், வர்த்தகமாடி கட்டடங்கள், இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. தமிழரசு, முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில் பேரன்கள், பேத்திகள் உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆடம்பர மாளிகைகளும், ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் விளங்கி கொண்டிருக்கிறது. கருணாநிதியின் பொய் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...